Tuesday, 20 September 2016

ரஜினி யோசனைக்கு 'NO' சொன்ன பிரபல இயக்குனர்

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-NO-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/

ரஜினி யோசனைக்கு 'NO' சொன்ன பிரபல இயக்குனர்
ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் தற்போது நடிக்கிறார் ரஜினி. இதன் பெரும் பகுதி படப் பிடிப்பு முடிந்திருக்கிறது. தொடக்கத்தில் இப்படத்திற்கு வில்லன் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வில்லன் வேடத்தில் சரத்குமாரை நடிக்க வைக்க எண்ணிய ரஜினி இதுபற்றி அவரிடம் பேச அவரும் நடிக்க காத்திருப்பதாக கூறினாராம். இதுபற்றி ஷங்கரிடம் ரஜினி கூறியபோது அவர் தயங்கினார்.

இப்படத்தை இன்டர்நேஷனல் அளவில் பேச வைக்க வேண்டும். அதனால் ஹாலிவுட் வில்லனை நடிக்க வைக்கலாம். சரத்குமாரை மற்றொரு படத்துக்கு பயன்படுத்திக்கொள்வதாக கூறினார். அதன்பிறகு அர்னால்டு உள்ளிட்ட சில ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் முயன்றார். அது ஒர்க்அவுட் ஆகவில்லை. இறுதியில் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை 2.0 படத்தில் வில்லனாக நடிக்க ரஜினி கேட்ட விஷயத்தை சமீபத்தில் சரத் வெளியிட்டார்.


No comments:

Post a Comment