Thursday 27 April 2017

Indefinite Strike From May 30 - Vishal

Indefinite Strike From May 30 - Vishal

மே 30 முதல் வேலைநிறுத்தம் - விஷால் அறிவிப்பு 
 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத்தலைவரும்,நடிகர் சங்கத்தலைவருமான விஷால் இது குறித்து கூறியதாவது.. மத்திய மாநில அரசுகளுக்கு எங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளிக்கவுள்ளோம் , அந்த கோரிக்கைகளை 30 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் இல்லாத பட்ஷத்தில் மே 30 தேதி முதல் சினிமா துறையில் எந்த ஒரு வேலையும் நடக்காது. படப்பிடிப்பு ,தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் திரையிடப்படமாட்டாது என்று விஷால் கூறியுள்ளார். 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் மத்திய அரசுக்கு விடுத்த  வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு ..
 
1.)    GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.
 
2.)    திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4  அல்லது 5 சதவிகிதம் மட்டுமேGST யாக இருக்க வேண்டும்.
 
3.)    திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.
 
4.)    மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி  மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
 
5.)    புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.
 
6.)    திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை. 
 
        
 
மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்
 
1.)    திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
 
2.)    திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.
 
3.)    திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
 
4.)    அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
 
5.)    உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
6.)    ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.
 
7.)    ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
 
8.)    இந்த துரையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.) இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment