South Indian Actor Association and Tamil film Producers Association Mourning for Actor Vinu Chakravarthy Death
South Indian Actor Association and Tamil film Producers Association Mourning for Actor Vinu Chakravarthy Death
நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!!
பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
' ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.
தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் இன்று வியாழக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்திக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆயிரத்து மூன்று படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றவர் வினுசக்கரவர்த்தி. 72 வயதான அவரின் மறைவு சினிமா உலகுக்கு பெரும் இழப்பு. அன்னாரின் ஆன்மா சந்தியடைவும், பிரிவால் வாடும் அவரின் குடும்பத்துக்கு ஆறுதலையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது
No comments:
Post a Comment