Saturday 29 April 2017

Truth Behind Radhika in 'Viral' Cocacola Ad | கோககோலா சர்ச்சையில் ராதிகா

Truth Behind Radhika in 'Viral' Cocacola Ad | கோககோலா சர்ச்சையில் ராதிகா
Truth Behind Radhika in 'Viral' Cocacola Ad | கோககோலா சர்ச்சையில் ராதிகா
Making memes and troll videos in Social medias for 'likes' is a trend now. It has gone to level that people dig up so hard to make things ,go viral and get attention from people who are active in social media. Recently, actress Radhika was the target of the trolls. After the Marina protests for Jallikattu, youngsters and general public have vowed not to drink multinational drinks like Pepsi and Cocacola. 
Netizens were very vocal when a video of actress Radhika endorsing Cocacola, which resulted in multiple memes and troll videos. However, the alleged ad was released in 2005 and some have spread it as if it is a new ad. On clarifying this actress Radhika tweeted, "Understand ur sentiments, but talking about an ad which was done in 2005, Hindi version by Aamir Khan, Shows moral constipation, get a life". 
It is worrying that netizens gets mislead by false information. Spreading false news on social platforms have become a headache for tech giants like Facebook, who are in the process to eradicate them. 
கோககோலா சர்ச்சையில் ராதிகா
சமீபத்தில் நடிகை ராதிகா தோன்றும் கோககோலா விளம்பரம் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினா புரட்சியில் பெப்சி, கோககோலா போன்ற வெளிநாட்டு பானங்களை குடிப்பதில்லை என பலரும் தீர்மானித்திருந்தனர். ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களும் முடிவு செய்தனர். இதன் மூலம் பெப்சி, கோககோலாவின் விற்பனை பெரிதும் சரிந்ததாக தகவல்கள் வந்தன. இந்நிலையில்தோன்றும் கோககோலா விளம்பரம் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த விளம்பரம் காரணமாக நடிகை ராதிகாவுக்கு சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பல மீம்களும் வலம் வந்தன. ஆனால், உண்மையில் அந்த விளம்பரம் வெளிவந்தது 2005-ல். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு விளம்பரத்தை வைத்து தற்போது வெளிவந்த விளம்பரம் போன்று பொங்கி உள்ளனர் வலைதள போராளிகள். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள நடிகை ராதிகா, "உங்களின் உணர்ச்சிகள் புரிகிறதுஆனால் 2005-ல் வெளிவந்த ஒரு விளம்பரத்தை வைத்துக் கொண்டு இப்போது பொங்குவது வேலையற்றவர்களின் செயல், உருப்படியான விஷயத்தைப் போய் பாருங்கள்" என்று காட்டமாக கூறியுள்ளார். சமீபகாலமாக சமூக வலை தளங்களில் அதிக லைக்ஸை பெற வேண்டும் என்று, முடிந்து போன விஷயங்களை வைரல் ஆக்கி தேவை அற்ற பிரச்சனைகளை உருவாக்கும் போக்கு நிச்சயம் ஆபத்தானதே. சமூக வலை தளங்களில் இயங்குவோர், தங்களது சமூக பொறுப்புடன் நடந்துகொள்வது நாட்டுக்கு நல்லதுதவறான செய்திகளை பரப்புவதை தடுக்க ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment