Delhi Police to issue summons to Dinakaran
Delhi Police to issue summons to Dinakaran
டிடிவி .தினகரன் கைது?
அதிமுக வின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெ. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக. சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாக பிரிந்தது.இரு அணியினரும் கட்சியின் சின்னம் இரட்டை இலைக்கு உரிமைகோரி வழக்கு தொடர்ந்தனர். இது குறித்த தீர்ப்பு இன்று வெளிவரும் நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதற்காக 1.50 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சுகாஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில் இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக சுமார் 60 கோடி பேரம்பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை செய்த போலீஸ் மேலும் சிலரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாம்.
இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி.தினகரன் உட்பட சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி வட்டாரம் தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment