Monday, 17 April 2017

Fast and Furious 8 takes over Chennai Box office

Fast and Furious 8 takes over Chennai Box office
Fast and Furious 8 takes over Chennai Box office
Last Friday which marked Tamil New year had witnessed multiple movies release in Chennai. Pa.Paandi, Sivalinga, Kadamban were already targeted the Tamil New year's week end collection. Surprisingly, Vijay's super hit movie Theri has also had its second release and got released in few screens. 

Apart from these Tamil releases, hollywood's much awaited Fast and Furious 8 also released on Friday. It has become the clear winner in Chennai box office beating the remaining movies. Raghava Lawrence's Sivalinga stood second in the box office where Dhanush's directorial debut Pa.Pandi earned third position. Kadamban and Kavan got the next positions. Fast and Furious 8 also got a tremendous response across India and managed to collect Rs.12 crores.
சென்னையில் தமிழ் படங்களை ஓரங்கட்டிய ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்  
இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு  தனுஷின் ப.பாண்டி, கடம்பன் மற்றும் சிவலிங்கா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. விஜயின் தெறி திரைப்படமும் சில இடங்களில் வெளியானது. இதைத் தவிர ஹாலிவுட்டின் பிரமாண்ட படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் - 8 படமும் வெளியானது. கடந்த வாரங்களில் வெளியான கவண், காற்று வெளியிடை படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்தன. 

வார இறுதியில் கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்குமே நல்ல ஓப்பனிங் இருந்தது. தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அணைத்து தமிழ் படங்களையும் பின்னுக்குத் தள்ளி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் - 8 சென்னை பாக்ஸ் ஆபிசில் முதல் இடம் பிடித்துள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சிவலிங்கா படம் இரண்டாம் இடத்திலும், தனுஷ் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் ப.பாண்டி படம் மூன்றாம் இடத்தில உள்ளது. கடம்பன், கவண், காற்று வெளியிடை போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் - 8 படம் பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 12 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. 

No comments:

Post a Comment