Wednesday 28 June 2017

எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection

எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection
எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection | Tamil Cinema News
இந்த வாரம் கோலிவுட்டில் ரம்ஜான் விடுமுறையை குறிவைத்து வந்த இரண்டு படங்கள்அன்பானவன்,அடங்காதவன்,அசராதவன்’ ,‘வனமகன்
சிம்பு, தமன்னா,ஷ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தைப் போல நல்ல ஓப்பனிங்கும் இந்தப்படத்திற்கு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட ஃபைனான்ஸ் பிரச்சனையால் அநேக இடங்களில் முதல் காட்சி ரத்தானது.
இதனால் இதன் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது உண்மை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போனாதால் இப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் குறைந்தது. சிம்புவின் மேனாரிசமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தாலும் கதையும், கதை சொல்லப்பட்ட விதமும் ஒன்றும் புரியாமல் சிம்புவின் ரசிகர்களே விழி பிதுங்கி நின்றனர். மற்ற ரசிகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம் இன்டர்வல் விட்டவுடன் ஓட்டம்பிடித்தனர்.
மொத்தத்தில் விஜய்க்கு ஒருசுறா’, அஜித்திற்கு ஒருஆழ்வார்போல் சிம்புவிற்கு ‘AAA’. சென்னையை பொறுத்தவரை 1.25 கோடி கடந்த 5 நாட்களில் வசூலித்தது.
ஜெயம் ரவி,சாயீஷா நடிப்பில் .எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம்வனமகன்வெளியான இரண்டு தமிழ்ப்படங்களில் வனமகன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஜெயம் ரவி,சாயீஷா இருவரும் ரசிகர்களை கவர்ந்தனர். இருந்தாலும் மிக மெதுவாக பயணிக்கும் திரைக்கதை, அத்துடன் கதையின் போக்கு முன்னரே தெரிந்துவிடுவதாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதே உண்மை. சென்னையை பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் 95 லட்சம் வசூலித்துள்ளது.
இந்த வாரம் வெளிவந்த இந்த இரண்டு படங்களின் மூலம் விநியோகஸ்தர்கள் போட்ட முதலை எடுப்பதே கஷ்டம் என்கின்றனர். இதில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்னர் வெளியான ஆதி,நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியான படம்மரகத நாணயம்இதுவரை 1.25 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment