Wednesday 28 June 2017

கோவாவில் உருவான 'இவளுக இம்சை தாங்க முடியல '


கோவாவில் உருவான 'இவளுக இம்சை தாங்க முடியல '
கோவாவில் உருவான  'இவளுக இம்சை தாங்க முடியல '
சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன்அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்புடன் நகைச்சுவையாக சொல்லும்படம் 'இவளுக இம்சை தாங்க முடியல '.
இப்படத்தை ‘ரூல் பிரேக்கர்ஸ்’  மற்றும்  ‘தியா சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் சக்திவேல் , ஜெகன் நாராயணன் ஆகியோர்  இணைந்துதயாரிக்கிறார்கள்இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோபடங்களை இயக்கியவர்அவரிடம் பணிபுரிந்த வி.என்ராஜ சுப்ரமணியன்இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன்படத்தில் நாயகனாக நடித்தவர்பாலாவின் இயக்கத்தில் 'பரதேசி'படத்தில்அதர்வாவுடன் நடித்தவர்.நாயகியாக சஹானா நடித்துள்ளார்விஜய் டிவியின் ' கனாக்காணும் காலங்கள்புகழ் சிவகாந்த் முழு  நீளகாமெடியனாக வந்து கலகலப்பூட்டிக் கலக்குகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளதுகோவா நகரம் அதன்  தெருக்கள் ,சாலைகள் என45 நாட்கள் படப்பிடிப்புநடந்துள்ளதுமற்ற எந்தப்  படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப் பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்இப்படம் முழுக்கஇளைஞர்களை மையப் படுத்தி  டுக்கப்பட்டுள்ளதுஇளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும்இடம்பெறவில்லைஇது ஒரு முழு நீள ட்ராவல் காமெடிப் படம்.   ஜூலை இறுதியில் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment