Wednesday 7 June 2017

தமிழ் படம் இயக்கும் மஜித் மஜிதி| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News

தமிழ் படம் இயக்கும் மஜித் மஜிதி| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
தமிழ் படம் இயக்கும் மஜித் மஜிதி| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Majid Majidi directs Tamil Film| தமிழ் படம் இயக்கும் மஜித் மஜிதி| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
உலக புகழ்பெற்ற ஈரனிய பட இயக்குனர் மஜித் மஜிதி. இவருடையசில்ரன்ட்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘கலர் ஆஃப் பாரடைஸ்ஆகிய படங்கள் உலக சினிமா ரசிகர்களின் ஃபேவரைட். இவர் முதன் முறையாக ஹிந்தியில்பியான்ட் தி க்ளவுட்ஸ்என்ற படத்தை இயக்குகிறார். ஆஸ்கார் நாயகன் .ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பாலிவுட் கதாநாயகன் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. பழம்பெரும் நடிகை ஜி.வி.ஷாரதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு சில காரணங்களை முன்னிட்டு தீபிகா படுகோன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.
இயக்குனர் மஜித் மஜிதிபியான்ட் தி க்ளவுட்ஸ்படத்தினை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் எடுக்க திட்ட மிட்டிருக்கிறார். இப்படத்தினை தயாரிக்கும்ஜீ ஸ்டுடியோஸ்மற்றும் கேண்டிநிறுவனங்கள் இதை உறுதி படுத்தியுள்ளன. அந்தந்த மொழிகளின் தன்மைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற வகையில் படமாக்கப்படுகிறது. அண்ணன், தங்கையை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாக்கபட்டுள்ளது. தன்னுடைய அனைத்து குறும்படங்களிலும், திரைப்படங்களிலும் எதார்த்தம் மீறாமல் எடுக்கும் மஜித் மஜிதியின் படத்தை எதிர் பார்த்து ஆர்வத்துடன் இருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment