Wednesday 7 June 2017

Super Star Rajini's power show in Chennai


Super Star Rajini's power show in Chennai


Super Star Rajini's power show in Chennai

Super Star Rajinikanth's upcoming film Kaala's first schedule of shooting in Mumbaiis successfully completed. The crew is expected to begin work in Chennai. Ever since, Rajni joined the shooting in Mumbai, the city has seen massive fan turnout in shooting spots. The makers of the movie expect even more massive number of fans in Chennai set as reports strongly indicate that Rajinikanth is all set to float his own political party in August.

Produced by Dhanush's Wunderbar Films, Kaala has an ensemble cast including Bollywood actors Huma Qureshi, Nana Patekar and Anjali Patil. National Award-winning actor Samuthirakani will play an important role in the film. Directed by Pa Ranjith, Kaala has music by Santhosh Narayanan.

சென்னையில் தன் பவரை காட்டப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் 'கபாலி' திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ப.ரஞ்சித் எடுத்து வரும் 'காலா' படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படம் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்று கூறப்பட்டு வந்த நிலையில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்தார். பின்னர் தயாரிப்பாளர் தரப்பு இதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த மிரட்டல்களுக்குப் பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மும்பையில் தங்கி படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துள்ளனர் காலா படக்குழுவினர். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி ஷூட்டிங்கிற்கு வரும்போதும், முடிந்து செல்லும் போதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்க மணிக்கணக்காக காத்திருந்தனர். இதனால், மும்பையில் ஷூட்டிங் எடுக்கும் பகுதிகள் அனைத்துமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. இந்நிலையில், மும்பை ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி உள்ளனர் படக்குழுவினர். இன்னும் சில நாட்களில் சென்னையில் தொடங்கும் இப்படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி கலந்து கொள்ள இருக்கிறார். காலா படத்திற்குப் பின்னர் அரசியல் பிரவேசம் எடுக்க இருக்கும்  இருக்கும் ரஜினியை சந்திக்க சென்னையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரள இருக்கிறார்களாம். கூட்டத்தை கட்டுப்படுத்தவே படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியை ஒதுக்க வேண்டும் போல் இருக்கிறது. 

காலா படத்தை, தன்னுடைய உண்டர்பார் நிறுவனம் மூலம் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இயக்குனர் ப.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். முதன் முறையாக தன் மாமனார் சூப்பர் ஸ்டாருடன் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்க, உமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

No comments:

Post a Comment