Saturday 17 June 2017

   'Rajini to announce his political entry on birthday' | 67 வது பிறந்த நாளில் அதிரடி முடிவு!          | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


10 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்துவந்த ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட  அவர் அரசியலுக்கு வருவதை அவரது பாணியிலேயே சொல்லிவிட்டு  ‘காலா’ படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு தமிழக அரசியல் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் சூடுபிடித்தது. ரஜினியை தங்களது கட்சிக்குள் வளைத்துப் போட சில கட்சிகள் விரும்பின. தமிழக அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தன. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘காலா’ படத்தில் தன்னுடைய முதல் ஷெட்யூலை முடித்துக்கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அனைவரிடமும் அரசியல் பிரவேஷம் குறித்து ஆலோசனை செய்து வந்தார். இந்த ஆலோசனையில் முன்னாள் இந்நாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.நடிகர்களை பொறுத்தவரையில் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோரிடமும் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே ஒருமித்த கருத்தாக முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு, கலைஞர்.கருணாநிதியின் வயது முதிர்வு என, தமிழக அரசியலில் ஒரு காலியிடம் இருப்பதால் ரஜினிகாந்த் இந்தக்காலக்கட்டத்தில் வருவது சரியானதாக இருக்கும் என கருத்து தெரிவித்தனராம்.
இந்நிலையில் கட்சியின் சின்னம், கொடி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். இது தொடர்பாக ரசிகர் மன்றத் தலைமை பதவியில் இருக்கும் நிர்வாகிகள் ஊடகம் நடத்தும் விவாதங்களிலோ வேறுவிதமான பொது நிகழ்வுகளிலோ எந்த கருத்து பரிமாற்றமும் செய்யக்கூடாது அப்படி செய்பவர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என அறிக்கை ஒன்றும் தலைமை மன்றத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
"போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என வழக்கம்போல் பூடகமாக பேசிய ரஜினிகாந்த் வரும் தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி ரசிகர்கள்மாநாட்டை நடத்தி அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் கட்சியின் கொள்கை கோட்பாடு அதிரடியாக இருக்கும் என ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் நம்பிவருகின்றனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment