Thursday 15 June 2017

விவேகம் படத்தின் முதல் சாதனை!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


விவேகம் படத்தின் முதல் சாதனை!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
விவேகம் படத்தின் முதல் சாதனை!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Vivegam Movie Creates a Massive Record for the first time | விவேகம் படத்தின் முதல் சாதனை!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சத்யஜோதி ஃபிலிம்ஸ் மிகபெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம்விவேகம்.’  அஜித் குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய்  ஆகியோரின் நடிப்பில்சிறுத்தை’  சிவா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதன் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தினுடைய புகைப்படங்களும், டீசரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.
விவேகம் படத்தின் ஆடியோவை ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ளவிவேகம்படத்தின் இசையுரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், 'மங்காத்தா', 'பில்லா 2', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' மற்றும் 'வேதாளம்' என தொடர்ச்சியாக அஜித் படங்களை வாங்கி வந்த சோனி மியுசிக் நிறுவனம்விவேகம்படத்தின் பாடல்களையும் வாங்கியுள்ளது.
விவேகம் படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் ரூபாய் 2 கோடிக்கு வாங்கியுள்ளது. இது அன்மைக்கால தமிழ்ச்சினிமாவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்து விநியோகஸ்தர்கள் கூறும்போது தமிழ்சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் உள்ள நடிகர்களில் அஜித்குமார் முதலிடத்திலிருக்கிறார். துப்பறியும் ‘RAW’ ஏஜென்டாக வருவது போல் கதையம்சம் கொண்ட படமென்கிறார்கள். இதுவரை வெளிவந்த புகைப்படங்களை பார்த்த பிறகு திரைப்படத்தை சீக்கிரமே பார்த்துவிட வேண்டுமென ஆர்வம் ஏற்படுகிறது. எனவே வசூல் ரீதியாகவும் இந்தப்படம் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இதை உறுதி செய்வது போல் விவேகம் ஆடியோ உரிமை 2 கோடிக்கு போயுள்ளது குறிப்பிடதக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment