Tuesday, 1 August 2017

எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Nibunan| Kootathil Oruthan Movie Box Office Collection


எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Nibunan| Kootathil Oruthan Movie Box Office Collection
எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| Nibunan| Kootathil Oruthan Movie Box Office Collection | Tamil Cinema News
எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?| AAA | Maragatha Naanayam | Vanamagan Box Office Collection | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
இந்த வாரம் வெளியான படங்களான நிபுணன், கூட்டத்தில் ஒருத்தன் இரண்டுமே விநியோகஸ்தர்களுக்கு சோதனை ஏற்படுத்திய படங்களாகவே பார்க்கப்படுகிறது. இதில் எந்தப்படம் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.
அச்சமுண்டு அச்சமுண்டு ,பெருச்சாழி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுனின் 150-வது படம் என வெளியாகியிருக்கும் நிபுணன் படத்தின் வியாபாரம் எப்படி?
நகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர், டாக்டர் ஒருவர், வக்கீல் ஒருவர், நாய் ஒன்று, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என தொடர் கொலை நடைபெறுகிறது. இந்த கொலையைச் செய்வது ஒரே ஆள் தான் என்று நிபுணனான அர்ஜுனும், அவரது குழுவினரான பிரசன்னாவும், வரலட்சுமியும் வழக்கம் போல் கிளைமாக்சில் கண்டுபிடிக்கிறார்கள்.
படத்தைப் பார்க்கும் போது புத்திசாலித்தனமான ரசிகனுக்கு ஏன் ஏன் என ஆயிரம் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன. பதில் சொல்லவேண்டிய இயக்குநர் இது ஒரு எண்டர்டெயினர் என்றும் நோ லாஜிக் ஒன்லி மாஜிக் என்று திரைக்கதை அமைத்திருக்கிறார். அதனால் திரைக்கதையில் இயக்குநர் ஜொலிக்கவில்லை . திரைக்கதையின் தொய்வு, லாஜிக் மீறல்கள் என இருப்பதால் ரசிகர்கள் இந்தப்படத்தை பெரிதும் வரவேற்கவில்லை.
சென்னை தியேட்டர்களில் இந்தப்படத்திற்கு ஆவெரெஜ் ஓபனிங் தான். கடந்த 4 நாட்களில் தோராயமாக 50,65,500 ரூபாய் வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்களுக்கு லாபம் பெற்றுத் தராமல் போகும் படமாகவே இது பார்க்கப்படுகிறது.
அடுத்தாக 'கூட்டத்தில் ஒருவன்' அஷோக்செல்வன்,சமுத்திரக்கனி, ப்ரியா ஆனந்த், பால சரவணன் நடித்து, .செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம். ரமணியம் டாக்கீஸ், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் .செ.ஞானவேலின் கதாபாத்திர வடிவமைப்பில் பெரும் குழப்பம். அஷோக் செல்வனை மிடில் கிளாஸ் மாணவன் என அறிமுகப்படுத்திவிட்டு பாதிப்படம் வரை அவரை மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் பல  காட்சிகளில் உருவகப்படுத்தியிருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் படம் 3 மணி  நேரம் ஓடுவது போன்ற உணர்வை தருகிறது. காட்சியமைப்பில் எந்தவிதமான புதுயுக்திகளும் இல்லை. பால சரவணன் காமெடி சில ரசிக்கும் படியுள்ளது.பார்த்து புளித்துப்போன மிகை படுத்தப்பட்ட காட்சிகளால் ரசிகர்கள் அவதிப் படுகின்றனர்.
சென்னை தியேட்டர்களில் இந்தப்படத்திற்கான ரசிகர்களின் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும் இந்த வாரத் தோல்வி படம் 'கூட்டத்தில் ஒருவன்'. விநியோகஸ்தர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்படுத்தும் படமாக இருக்கும். கடந்த 4 நாட்களில் தோராயமாக 19,80,500 வசூலித்துள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment