Friday, 18 August 2017

I Didn't Love Anyone Says Prabhas


I Didn't Love Anyone Says Prabhas

I Didn't Love Anyone Says Prabhas

நான் யாரையும் காதலிக்கவில்லை

திரையில் காதலர்களாக இருக்கும் சில ஜோடிகள் உண்மையாகவே காதல்வசப்பட்டு நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக இணைவது, புதுசு அல்ல. காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் இணைய இருப்பதாக ஒரு தகவல் அவ்வப்போது பரவி வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலிப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த தகவலை பிரபாஸ் மறுத்து வருகிறார். அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இந்த நிலையில், பிரபாஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "என்னையும், ஒரு நடிகையையும் இணைத்து ஒரு தகவல் பரவியிருக்கிறது. அதில், உண்மை இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை" என்று கூறிருக்கிறார்.

No comments:

Post a Comment