Wednesday 30 August 2017

Amy Jackson’s Remuneration Package Shocks the Filmmakers and Admakers!


Amy Jackson’s Remuneration Package Shocks the Filmmakers and Admakers!
Amy Jackson’s Remuneration Package Shocks the Filmmakers and Admakers!
சம்பளத்தை உயர்த்திய எமிஜாக்சன்
விளம்பர படங்களில் அதிகமாக நடிக்கும் கதாநாயகி என்ற பெயரை வாங்கிருக்கிறார், எமிஜாக்சன். விளம்பர படங்கள் என்றாலே முன்னணி விளம்பர நிறுவனங்கள் இவரைத்தான் முதலில் தேடுகின்றன. அதிக விளம்பர படங்களில் நடிப்பவர் என்ற பெயருடன், விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெயரையும் சம்பாதித்து இருக்கிறார், எமிஜாக்சன்.
விளம்பர படத்தில் நடிக்க ரூ.75 லட்சம் வாங்கி வந்த இவர், இப்போது தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பள உயர்வு, வியாபார நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

இதுபற்றி எமிஜாக்சனுக்கு தெரிவிக்கப்பட்டது. "இந்த சம்பள உயர்வுக்கே இப்படி அதிர்ந்தால் எப்படி? '2.0' வெளிவந்த பின், என் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளேன். அப்போது இவர்கள் என்ன சொல்வார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார், எமிஜாக்சன்.

No comments:

Post a Comment