Monday 28 August 2017

Rajinikanth's Kaala is waiting to release in Tamil New Year

Rajinikanth's Kaala is waiting to release in Tamil New Year
Rajinikanth's Kaala is waiting to release in Tamil New Year

புத்தாண்டு விருந்தாக காலா

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0'படம், ஜனவரி 25-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில், தமிழ் புத்தாண்டு விருந்தாக (ஏப்ரல் 14-ந் தேதி) 'காலா' படத்தை திரைக்கு கொண்டு வர, அதன் தயாரிப்பாளர் தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

"காலா படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும். படத்தை ஏப்ரல் 14-ந் தேதி 'ரிலீஸ்' செய்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

'காலா' படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரிராவ், ஹூமா குரேசி, அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷின்டே, சம்பத்ராஜ், அரவிந்த் ஆகாஷ், பங்கஜ் திரிபாதி, ரவி காளே, சுகன்யா, திலீபன், சாக்க்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்".

No comments:

Post a Comment