Wednesday 16 August 2017

Kajal Aggarwal to pair up with 3 heros in same time


Kajal Aggarwal to pair up with 3 heros in same time
Kajal Aggarwal to pair up with 3 heros in same time
ஒரே நேரத்தில் 3 பெரிய கதாநாயகர்களுடன்..!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழி பட உலகிலும் பிரபல நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே சமயத்தில் அவர் மூன்று பெரிய கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். அந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
இவர், ராணா ஜோடியாக நடித்த 'நானே ராஜா நானே மந்திரி' என்ற தெலுங்கு படம், கடந்த 11-ந் தேதி திரைக்கு வந்தது. இதே படம், 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் தமிழில் வெளிவந்து இருக்கிறது. இதையடுத்து விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, வருகிற 20-ந் தேதி நடைபெற இருக்கிறது. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த 'விவேகம்' படம், இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம், காஜல் அகர்வாலுக்கு ராசியான மாதமாக அமைந்து இருக்கிறது.

No comments:

Post a Comment