Sivakarthikeyan again faces problems because of Producers Council
Sivakarthikeyan again faces problems because of Producers
Council
தயாரிப்பாளர்களால்
சிவாவுக்கு வந்த பிரச்சனை
"ஏற்கனவே
சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்
நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது”என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கத்தில், ஸ்டுடியோக்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா,
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ்
மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய
மூன்று தயாரிப்பாளர்களும், புகார் கொடுத்தனர்.
மூன்று
தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்,
சிவகார்த்திகேயனை அழைத்து பேசிய தயாரிப்பாளர்கள்
சங்கம், மூவருக்கும் கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கு சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில்,
'நானும் ரௌடிதான்' பட இயக்குநர் விக்னேஷ்
சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது
வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே
தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால்
இப்போது மீண்டும் இந்த பிரச்னை வெடிக்கும்
என தெரிகிறது. இதனால் ஆரம்பநிலையிலேயே சிவகார்த்திகேயன்
- விக்னேஷ் சிவன் படத்திற்கு முட்டுக்கட்டை
ஏற்பட்டிருக்கிறது
No comments:
Post a Comment