Wednesday 16 August 2017

VIP 2 | Podhuvaga Emmanasu Thangam| Taramani Box Office |எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?


VIP 2 | Podhuvaga Emmanasu Thangam| Taramani Box Office |எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
VIP 2 | Podhuvaga Emmanasu Thangam| Taramani Box Office Collection|எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
இந்த வாரம் வெளியான படங்களான வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணிஇந்த படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வேலையில்லா பட்டதாரி 2. விநியோகஸ்தர்களாலும், ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை கொடுத்திருக்கிறதா?

வேலையில்லா பட்டதாரி கொடுத்த மிகப்பெரிய வெற்றியை அதிகம் எதிர்பார்த்ததன் விளைவால்  இந்தப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 18 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  மட்டும் 1.கோடியே 63 லட்சம் வசூலாகியுள்ளதுஇருப்பினும் இது எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட குறைவானது என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

அடுத்தாக பொதுவாக எம்மனசு தங்கம் உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெதுராஜ் மற்றும் சூரி நடித்திருந்த இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்றே சொல்ல வேண்டும். பார்த்திபன் ,சூரி ஆகியோரின் காமெடியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தனர். கதையும் திரைக்கதையும் சுவாரஷ்யமாக இல்லை.இதனால் இப்படம் விடுமுறை காலத்திலும் கூட ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருந்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த 4 நாட்கள் சுமார் 75 லட்சம் வசூலாகியிருக்கிறது.

தரமணி  A சென்டர் படம் என எதிர்பார்த்த இந்தப்படம் அனைத்து ஏரியாக்களிலும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ரியாவின் போல்டான கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது, இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமாகும். அத்துடன் படத்தின் இயக்குனர் ராமின் வாய்ஸ் ஓவர் மூலம் சமூக அவலங்களை அலசுவது ரசிகர்களை கைதட்ட வைக்கிறது.
இந்தப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. சென்னையில் இந்தப்படத்தின் 4 நாட்கள் வசூல் 41 லட்சமாகும்.

Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment