Jallikattu Julie's Next Action goes Viral in Bigg Boss

பிக் பாஸில் கலக்கும் ஜூலியின் அடுத்த அதிரடி
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது சாதாரண வழக்குமொழி அல்ல, அது எவ்வளவு உண்மை என்பதற்கு சாட்சியாக பல கதைகள் உண்டு. தமிழக மக்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால், அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவர், அதற்கு சமீபத்திய உதாரணம் ஜூலியானா. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், அரசியல் தலைவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து கூவியது சில செல்போன் கேமராக்கள் மூலம் வைரல் ஹிட் ஆனது. போராட்டம் முடியும் வரை வாட்ஸாப்பில் தினம் தினம் ஜூலியின் வெவ்வேறு கோஷங்கள் வந்து கலக்கின.
சில நாட்களில் பிரபலமான ஜூலியை பற்றி பல்வேறு தவறான தகவல்களும், அவதூறுகளும் வெளியாகாமல் இல்லை. ஏதோ ஒரு வாட்ஸாப் கதாசிரியர் ஜூலியை ஆளும்கட்சி ஆட்கள் கொன்று விட்டதாக கிளப்பி விட்ட கதையையும் பல லட்சம் பேர் ஷேர் செய்தனர். உண்மையில், இதை எல்லாம் படித்துவிட்டு கேலி சிரிப்போடு தன்னுடைய நர்ஸ் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார் ஜூலி. அதன் பின்னர், மக்களுக்கு அரசியல் அதிரடிகளால் தினம் தினம் பொழுதுபோக்கு கிடைக்க கிட்டத்தட்ட ஜூலியை மக்கள் மறந்தே போயினர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் இந்தியில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் கிளப்பிய பிக் பாஸின் தமிழ் பாதிப்பை தொகுத்து வழங்க ஆரம்பித்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் என்ட்ரி கொடுத்தார் ஜூலி. அது முதலே பிசியாகி விட்டனர் மீம் கிரியேட்டர்கள். அந்நிகழ்ச்சியில் ஜூலி என செய்தாலும், பேசினாலும் உடனே சுடச்ச்சுட மீம்கள் குவிகின்றன. இந்த ரெஸ்பான்ஸை எதிர்பார்த்தே ஜூலியை இந்நிகழ்ச்சியில் சேர்த்தது விஜய் டிவி. ஜூலியுடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் பிரபலங்கள் பலரும் ஜூலியை தங்களுக்கு ஆபத்தானவராகவே பார்ப்பது தான் ஆச்சர்யம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டுப் போராளி, வீரத் தமிழச்சி என்று இதே சமூக ஊடகர்களால் புகழ்ந்து தள்ளப்பட்ட ஜுலி, தன்னைக் கட்டிப்பிடிக்க அதாவது Hug செய்ய ஆளில்லை என்று சொன்னதாகவும் அதனால் அந்த வீரத்தமிழச்சி மானம் மல்லாந்து விட்டதாக, அதே சமூக ஊடகவியலாளர்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 'தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை' என்ற தொனியில் அவர் சொன்னதை அருவருக்கத் தக்க வகையில் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனாலும், இவை எல்லாமே ஜூலியின் பாப்புலாரிட்டியை அதிகப்படுத்தி அவரை போட்டியில் நீடிக்கவே செய்ய உதவும்.
கிட்டத்தட்ட ரிட்டயர்மெண்ட் வாங்கும் நிலையில் இருக்கும் பிரபலங்களே பிக் பாஸ் வீட்டில் நிறைந்திருக்கும் நிலையில், ஜூலி ஒருவரை மையப்படுத்தியே பார்வையாளர்களும் இந்நிகழ்ச்சியை நோக்குகின்றனர். ஒருவேளை, ஜூலி இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், இவ்வளவு பாப்புலாரிட்டி கொண்ட ஜூலியை தங்களின் தொகுப்பாளராக தக்க வைத்துக்கொள்ளவே விரும்புகிறதாம் விஜய்டிவி தரப்பு. கேலி, கிண்டல்களை பொறுத்துக் கொண்டு ஜூலி இந்நிகழ்ச்சியில் தொடர்வாரா இல்லையா என்பது இனிவரும் வாரங்களில் தெரியும்.

No comments:
Post a Comment