#KamalHassan #Centralgovernment #TamilCinemaNews #KollywoodNews #TamilCinemaNews
Kamal Hassan
Condemn central government | மத்திய அரசுக்கு கமல் கண்டனம்! | Tamil
Cinema News | Kollywood News | Tamil Cinema News
நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதிமுதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்படுகிறது. இதில் திரைத்துறைக்கு 28% வித்திக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, மத்திய அரசை வன்மையாக கண்டித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்..
இந்திய திரைப்பட தொழிலுக்கு சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது போல் 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மிக அதிகமான வரிவிதிப்பினால் அனைத்து மாநில மொழிபடங்களின் தயாரிப்பும் மிக விரைவில் சாகடிக்கப்படும். பிராந்திய மொழி படங்கள், தேசிய மொழியான இந்தி படங்களுடனும், ஆங்கில மொழி படங்களுடனும் சமமாக சேர்க்கப்பட்டு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் சென்ற வருடம் 2100 படங்களை தணிக்கை செய்துள்ளது. அதில் 200 படங்கள் மட்டுமே இந்தி மொழிப்படங்கள் ஆகும்.
ஐரோப்பாவில் 50 வருடத்திற்கு முன் இதே போன்ற வரி விதிக்கப்பட்டபோது ஸ்பானிஷ், ஃபிரென்ஞ்ச், இத்தாலி மொழ்ஹி படங்கள் அதை எதிர்த்தன, அந்தந்த நாடுகள் இதை செவி சாய்க்காததால் ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடமுடியாமல் இந்த நாடுகள் தயாரிப்பு தொழிலை கைவிட்டன. இந்திய அரசாங்கம் இதனை கைவிடாவிட்டால் ஐரோப்பாவில் நடந்தது போன்ற ஒன்று நடந்துவிடுமோ என அஞ்சுகிறோம். ஜி.எஸ்.டி வரி செலுத்ததயார் ஆனால் அதிக சுமையை ஏற்றாதீர்கள்.
இது குறித்து கமல்ஹாசன் கூறியபோது..
சினிமா என்பது சூதாட்டம் அல்ல.. அது ஒரு கலை. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 28% சதவிகிதம் வரி விதிப்பது தேவையற்றது. இந்தி சினிமாவையும், தமிழ் சினிமாவையும் ஒரே அளவுகோலில் பார்க்கக்கூடாது இதனால் நாங்கள் இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் அல்ல. நம்ம தேசிய கீதம் வங்காளத்தில் தான் இருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஒரே நாடு என்பதில் எங்களுக்கு விருப்பம் உண்டு அதே சமயத்தில் நாடு முழுக்க ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி சினிமாவிற்கு 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுகொள்ள முடியாதது. சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல.. பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். எனக்கு சினிமாதான் வாழ்க்கை. நான் பேசக்கற்றுக்கொண்டதே சினிமாவில்தான். திரை துறையினரை நம்பி ஏராளமானோர் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்ப்ட்டால் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வேன் தயாரிக்கமாட்டேன். இதை எதிர்த்து கர்நாடகம், மேற்குவங்கம்,அந்திரா போன்ற மாநிலங்களிலலெதிர்ப்பு தெரிவிக்கபட்டுள்ளது. எனவே மத்திய அரசு இதை பரிசீலனை செய்யவேண்டும்.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment