Thursday 8 June 2017

Superstar ending his political way | அரசியலுக்கு முழுக்கு போடும் சூப்பர் ஸ்டார்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


Superstar ending his political way | அரசியலுக்கு முழுக்கு போடும் சூப்பர் ஸ்டார்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தமிழ்நாட்டு அரசியலில் அவ்வபோது அரசியலுக்கு வருவதாக புயலை கிளப்பும்காலாரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் சிரஞ்சீவி. ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை அவரது அபிமானிகள்மெகா ஸ்டார்எனவும்ச்சிறுஎனவும் அன்புடன் அழைப்பார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென நினைப்பவர்களில் இவரும் ஒருவர். ரஜினியும், சிரஞ்சீவியும் பரப்பரபான அரசியல் சூழ்நிலை நிகழும்போது ஆலோசித்தும் இருக்கின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தக்க தருணம் பார்த்து கொண்டிருக்கும் அதே வேளையில் சிரஞ்சீவி அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன,
பரப்பரபான ஆந்திர அரசியல் சூழ்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவிபிரஜா ராஜ்யம்என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும், தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு மாற்றாக பிரஜா ராஜ்யம்கட்சி விளங்கும் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அவரும் அவரது கட்சியில் சிலர் மட்டுமே அந்ததேர்தலில் வெற்றிபெற்றார். அதன் பிறகு காங்கிரஸூடன் இணைந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவரும் சிரஞ்சீவி கடந்த ஒரு வருடமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அன்மையில் கலைஞர்.கருணாநிதி அவர்களின் வைர விழாவிற்கு வந்த அகில இந்திய காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆந்திராவுக்குச் சென்றார். அவரது தலைமையில் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் சிரஞ்சீவி பங்கேற்கவில்லை. இதனால் சிரஞ்சீவி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஓராண்டாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குண்டூரில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிரஞ்சீவி பங்கேற்கவில்லை. ராகுல் காந்தியின் இந்த பயணம் தொடர்பாக அவர் டுவிட்டரிலும் கருத்து தெரிவிக்காதது, அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கான அறிகுறிகளை காட்டுவதாக தெலுங்கு அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முன்னதாக ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்றபோது, சிரஞ்சீவி உடன் செல்லவில்லை. சிரஞ்சீவியின் ராஜ்ய சபா பதிவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. இதனிடையே, இந்தாண்டு தொடக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'கைதி எண்.150' திரைப்படம் மாபெரும் வெற்றி பெட்ரா நிலையில், சிரஞ்சீவி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாக தெலுங்கு திரையுலக வட்டாரம் தகவல் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், 'ஜன சேனா' என்ற கட்சியை நடத்தி வருவது குறிப்பிடதக்கது..
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment