Saturday, 3 June 2017

Use ajinomoto’ Sneha
சில நாட்களுக்கு முன்னர் அஜினோமோட்டவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரசன்னா, சினேகா இருவரும் சக்கரை, உப்பு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசியது என்னவென்றால் ‘அஜினோமோட்டோ, நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கு நல்ல சுவையை கொடுக்கூடிய பொருள். நான் சமைக்கும் சாப்பாட்டில் சுவைக்காக சேர்க்கிறேன். ‘அஜினோமோட்டோ’ங்கிறது உப்பு, சக்கரை மாதிரி ஒரு பொருள் தான் அளவோடு உபயோகபடுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’’ என்ற பழமொழியையும் வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாமல், கெமிக்கல் எஞ்சினியரிங்ல டாக்டர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளர் மாதிரி சொல்லிட்டு போயிட்டார். சீனா உற்பத்தி செய்யும் இந்த அஜினோமோட்டவை சீன மக்கள் பயண்படுத்த அந்த நாடு தடைவித்துள்ளது சினேகாவுக்கு தெரியுமா?

அஜினோமோட்டோ பற்றி டாக்டர்களும், நியுட்ரிஷியன்களும் என்ன சொல்றாங்க தெரியுமா?

‘மோனோசோடியம் குளூட்டமேட்’என்ற வேதிப்பெயரைக்  கொண்ட ஒருவகை உப்பு தான் ‘அஜினோமோட்டோ’. இந்த அஜினோமோட்டோவை ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து கைவண்டி கடை வரைக்கும் உபயோகப்படுத்தி வருகிறார்கள் 
அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இரு மாறுபட்ட  கருத்துகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடும்  குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும்.இதன் மூலம் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. ‘மோனோசோடியம்’ வேதிப் பொருள் மூளையில் ‘ஆர்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியைப்பாதிப்பதால் உடல் எடை  அதிகரிக்கும்இது மூளை மட்டுமின்றி இரைப்பைசிறுகுடல்கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் ரத்தக் கசிவு தொடங்கி புற்று நோய் வரை பல நோய்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். எனவே சினேகா அக்கா சொன்னாலும் கனகா அக்கா சொன்னாலும் நம்ம ஆரோக்கியம் நம்ம கையிலதான் இருக்கு.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment