விஜய்சேதுபதி கதையை சுட்ட கார்த்தி!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
விஜய்சேதுபதி
கதையை சுட்ட கார்த்தி!| Tamil Cinema News | Kollywood News |
Tamil Cinema Seithigal
Actor karthi stolen Vijay Sethupathi's Story | விஜய்சேதுபதி கதையை சுட்ட கார்த்தி!|
Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சசிகுமாரின்
‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்
பாண்டிராஜ். தன்னிடம் உதவி இயக்குனராக இருந்து
வந்த பாண்டிராஜுக்கு சசிகுமார் வாய்ப்பு கொடுத்து அவரை இயக்குனராக்கியது போன்று
பாண்டிராஜும் தன்னுடைய உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக
அறிமுகம் செய்து வருகிறார். அந்த
வகையில் முதலில் நவீன் என்பவரை
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம்
அறிமுகம் செய்தார். இதையடுத்து தன்னுடைய அடுத்த உதவி இயக்குனர்
வள்ளிகாந்தை ‘செம்ம’ படத்தின் மூலம்
இயக்குனராக அறிமுகம் செய்துள்ளார். வரும் ஜூலை மாதம்
இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில்
‘பசங்க 2’ படத்திற்குப் பிறகு சூர்யாவின் ‘2D’ நிறுவனத்துக்கு
மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யாவின்
தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இதை ‘செம்ம’ படத்தின்
இசை வெளியீட்டு விழாவில் ‘2D’ நிறுவனத்தின் சார்பில் சூர்யாவின் நண்பர் ராஜசேகர் பாண்டியன்
அறித்தார். பின்னர் பேசிய இயக்குனர்
பாண்டிராஜ் இதை உறுதி செய்தார்.
கார்த்தி
நடிப்பில் ‘மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு ‘தோழா’ நீங்கலாக
‘காஸ்மோரா’ உட்பட அனைத்து படங்களும்
தோல்விப் படங்களே. அதிலும் மணிரத்னம் இயக்கத்தில்
அன்மையில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படு
தோல்வியை சந்தித்தது. மறுபடியும் ஒரு ஹிட் கொடுக்க
வேண்டிய அவசியத்திலிருந்த கார்த்தி, விஜய்சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட கலகலப்பான, ஆக்ஷன், சென்டிமென்ட்
கலந்த கதையை பாண்டிராஜிடம் கேட்டுள்ளார்.
உடனே பிடித்து போய்விட்டது.
இந்தக்கதையில்
தானே நடிப்பதாகவும் தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பாண்டிராஜ் இந்தக்கதை
விஜய்சேதுபதிக்காக உருவாக்கபட்டுள்ளது என கூறிய பிறகும்
பாண்டிராஜை வற்புறுத்தி சம்மதிக்க வைத்திருக்கின்றார் கார்த்தி.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment