Monday 12 June 2017

த்ரிஷாவுடன் கட்டிபுரளும் விஜய் சேதுபதி!| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal

த்ரிஷாவுடன் கட்டிபுரளும் விஜய் சேதுபதி!| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
த்ரிஷாவுடன் கட்டிபுரளும் விஜய் சேதுபதி!| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
Vijay Sethupathi Romance with Trisha – 96 | த்ரிஷாவுடன் கட்டிபுரளும் விஜய் சேதுபதி!| Tamil Cinema News| Kollywood News | Tamil Cinema Seithigal
மக்கள் நாயகன் விஜய்சேதுபதி பல்வேறு கதாபாத்திரங்களில் வெவ்வேறு தோற்றங்களில் நடித்து அசத்தி வருபவர். தற்போது த்ரிஷாவுடன் காதல் கனிரசம் சொட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தின் பெயர் ‘96’.
விஜய்சேதுபதியின் நீண்ட நாளைய நண்பர் பிரேம்குமார் படத்தை இயக்குகிறார். இவர்நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்பசங்கசுந்தரபாண்டியன்போன்ற படங்களின் கேமராமேன் ஆவார். ‘96’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் முழுக்க முழுக்க ரொமேன்டிக்காக உருவாகவிருக்கும் இப்படத்தில் காட்டு விலங்குகளின் வாழ்க்கையினை புகைப்படங்களாக எடுக்கும் புகைப்பட நிபுனராக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
விஜய்சேதுபதி,த்ரிஷா முதன்முறையாக இணையும் ‘96’ படம் இன்று சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இந்த விழாவில் படத்தின்  நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. . இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடிக்கவுள்ளனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment