Saturday 11 February 2017

Kamal backs OPS as CM

Kamal backs OPS as CM
Kamal backs OPS as CM
Kamalahasan has been very active in Twitter voicing out his thoughts on various issues. He is backing Chief Minister O.Pannner Selvam in the recent political dramas. He think OPS is doing a good job and he should continue serving as CM. Kamal also said he has no intention to come to politics but it is his duty to echo the people's thought. OPS and his supporters are happy that they have earned the support of a leading actor
ஓபிஎஸ் ஆதரவாக களமிறங்கிய கமல் 
சமீப காலமாக ட்விட்டரில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வரும் கமலஹாசன், தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் மிகுந்த ஆர்வம் காட்டி கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். சசிகலா தரப்பை மறைமுகமாக சாடி வந்த கமல் தற்போது வெளிப்படையாகவே ஓபிஸ்-க்கு  ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுவும் இந்திய நாடே பார்க்கும் என்டிடிவி, சிஎன்என் என பல தொலைக்காட்சிகளில் தோன்றி தன் ஆதரவை வெளிப்படுத்தி வருவது பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
பன்னீர் செல்வம் நல்ல மனிதராக தெரிகிறார், இதுவரை அவர் ஆட்சியில் குற்றம் காண கூடிய வகையில் பெரிதாக ஏதும் இல்லை, சட்டமன்றத்துக்கு தேர்தெடுக்கப் பட்டவர் ஆகவே அவருக்கு என் ஆதரவு என கூறியுள்ளார் கமல். பன்னீர் செல்வத்துக்கும்  தனக்கும் தனிப்பட்ட எந்த நட்பும் இல்லை, இல்லை என்றாலும் தமிழ் நாட்டு மக்களின் குரலை தான் பிரதிபலிப்பதாகவும், அது தன்னுடைய கடமை எனவும் தெரிவித்துள்ளார்.  

தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் மக்களுக்காக செயல்பட வேண்டும், அது தவறும் பட்சத்தில் மக்களோடு இணைந்து தானும் போராடுவேன்.  நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை, 5 வருடத்திற்கு ஒருமுறை என் ஜனநாயகக் கடமை ஆற்றி என் அரசியல் இருப்பை பதிவு செய்கிறேன். லஞ்சமும், ஊழலும்  ஜனநாயகத்தின் ஆபத்தாக உள்ளன, அதை அகற்ற பாடுபட வேண்டும்.
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், சசிகலா முதல்வர் பதவிக்கு வரும் முறையையே நான் எதிர்க்கிறேன். காமராஜ், ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் போன்ற நல்ல தலைவர்களை நாட்டிற்கு தந்த தமிழ்நாட்டின் தற்போதைய  நிலை கவலை அளிக்கிறது. எம்எல்ஏக்களை தக்க வைக்க குதிரை பேரம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பன்னீர் செல்வமே முதல்வராக நீடிப்பதே நல்லது எனவும் கூறி உள்ளார் கமல். 

No comments:

Post a Comment