Sivakarthikeyan-Mohan Raja Film Produced by 24 AM STUDIOS gets titled Velaikkaran first Look Of Labour Day and worldwide release on Vinayaga Chathurthi
We would never see a ‘Labourer’ in tears for they are always mixed with sweat. Behind everyone’s privilege of enjoying the lives, there lies beneath the unceasing hard work of labourers. In fact, every actor is a labourer who wears the mask of different roles to entertain, amuse and engross the audiences. The enormous growth of Sivakarthikeyan over the years as an actor is the fruit that he earned out of his dedication, will power and passion towards dreams. Well, a sincere ‘Velaikkaran’ (Labourer) will always remain close to everyone’s heart and that is so much evident with Sivakarthikeyan’s success graph in his career.
With the actor’s birthday flooded with heartiest wishes across the far-flung corners, the official announcement of his upcoming film title ‘Velaikkaran’ has been unveiled.
The combination of Sivakarthikeyan-RD Raja on their maiden debut ‘REMO’ has turned the spotlights beyond the boundaries. Right from the moment, the official announcement was made upon their second collaboration, that too with a promising filmmaker like Mohan Raja getting onboard; it’s been heavy downpour of gold rush.
Conveying his birthday wishes to Sivakarthikeyan with beautiful poetic phrase “My hearty birthday wishes to the one and only ‘Velaikkaran’ who beautifies the essence of hard work,” and furthermore adds, “Velaikkaran will speak about the glory of labourers, who sweat and work with heart and soul.”
Scheduled for release on August 25 for the festive occasion of Vinayaga Chathurthi, the first look of this film will be unveiled on May 1st, 2017 marking the ‘Labour Day’.
Velaikkaran is a social-commercial entertainer comprising of a power factory performers like Fahadh Faasil, Nayanthara, Prakash Raj, Sneha, Rohini, RJ Balaji, Satish and Robo Shankar. The film’s technical crew is yet more promising to see Anirudh (Music), Ramji (Cinematography) and Vivek Harshan (Editing).
சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் - ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான 'ரெமோ' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிரிபார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து: "கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உழைப்பாளர்களின் மகிமையை பற்றி இந்த 'வேலைக்காரன்' எடுத்து சொல்லும்"
வேலைக்காரன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 25) ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தரமான கதை, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, சிறந்ததொரு பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த வேலைக்காரன் திரைப்படம், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகளை உள்ளடக்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
No comments:
Post a Comment