Thursday 16 February 2017

Sivakarthikeyan who made his hurdles into success

Sivakarthikeyan who made his hurdles into success



கடின உழைப்பால் மக்கள் மனங்களை கவர்ந்த வெற்றிநாயகன் சிவகார்திகேயன்
Sivakarthikeyan who made his hurdles into success

நடிகர் சிவகார்திகேயனைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். விஜய்டிவியில் வந்த கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம், மீடியாவுக்குள் வந்து, தொகுப்பாளர் ஆகி, பின்னர் மெரினா திரைப்படம் மூலம் நடிகர் ஆனார் என்று. ஆனால் நமக்குத் தெரியாதது அவருடைய கடின உழைப்பு. திருச்சியில் பிறந்து வளர்ந்தவர் சிவா. சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவர். தன் அம்மா மற்றும் தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளி பயிலும் போதே பார்ட் டைமில் வேலைபார்த்து தன் குடும்பத்திற்க்கு உதவியவர். விளையாட்டாக மிமிக்ரி செய்ய ஆரம்பித்து, பின்னர் அது தான் தன்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பி, மேலும் தன்னுடைய கலையை வளர்த்துக் கொண்டார்.

பள்ளி முடிந்து, கல்லூரி காலத்திலும் எல்லா கல்ச்சுரல்களிலும் தன் பலகுரலால் அனைவரையும் கவர்ந்தார். அந்த சமயத்தில் தான் விஜய்டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்து, தங்குவதற்கு சரியான இடம் கூட அமையாமல் திண்டாடினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே நடுவர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர் முயற்சிகளால் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார். பின்னர் அவரை விஜய் டிவி தன்னுடைய தொகுப்பாளராக பணியமர்த்தியது. சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை கையாண்டார், தன் சக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உதவியால் துபாய் போன்ற நாடுகளுக்கும் சென்று காலை நிகழ்ச்சிகள் நடத்தினார். படிப்படியாக ஒரு நாள் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியையே தொகுத்து வழங்கினார். வாழ்க்கை நம்பிக்கை கொடுத்த நிலையில், தன் இளமை காலத்தில் உதவிய மாமன் மகளையே திருமணம் முடித்து தான் ஒரு நல்ல மனிதர் என்பதை நிரூபித்தார்.

அது, இது, எது என ஒரு நிகழ்ச்சியை தன் கவுண்டர்களுக்காகவே ரசிகர்களை பார்க்கவைத்தார். அப்போது தான் பாண்டிராஜின் 'மெரினா' படத்தில் ஒரு கேரக்டரில் ஒப்பந்தமானார். அது பெரிதாக கை கொடுக்கவில்லை. அனால், அடுத்து மனம் கொத்திப் பறவை என்ற படத்தில் ஹீரோவாக ப்ரோமோஷன் ஆனார். பின்னர் கூட சரியான வாய்ப்புகள் அமையாமல் தன் டிவி நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது தனுஷ் தயாரிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தில் நடித்தார், அந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது, பின்னர் அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியே, வெகு சீக்கிரத்தில் முன்னணி கதாநாயகன் ஆனார். மான் கராத்தே படம் மூலம் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனைப் பேரையும் கவர்ந்தார். அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஸ்டார்களை அடுத்து தயாரிப்பாளர்களின் தேர்வு சிவா தான். எந்த சென்னையில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அலைந்தாரோ இப்போது அதே சென்னையில் ரோட்டில் சிவா நடந்தால் வரலாறு காணாத டிராபிக் ஆகும் என்பது மட்டும் உறுதி. எல்லா சோதனைகளையும், தன் கடின உழைப்பால் சாதனை ஆக்கிய சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது அன்புத் தோழி தொகுப்பாளினி DD என்ற திவ்யதர்ஷினிக்கும் இன்றே பிறந்தநாள் என்பது இன்னும் சிறப்பு. DDக்கும் இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள் 

Actor Sivarkarhikeyan has started his carreer with Vijay Tv's Kalakkap povadhu yaru show. Later he grapped a role in Pandiaraj's Marina. Edhirneechal produced by actor Dhanush became a super hit and made Siva a top hero in Kollywood. After his super hit movie Maan Karate he is the favourite of all ages. We wish Sivakarthikeyan and his friend anchor DD a very happy birthday.

No comments:

Post a Comment