Friday 12 May 2017

Action king Arjun going to act in Controversy Karnataka CM’s Movie

Action king Arjun going to act in Controversy Karnataka CM’s Movie
Action king Arjun going to act in Controversy Karnataka CM’s Movie
சர்ச்சை முதல்வர் தயாரிக்கும் படத்தில் அர்ஜுன்!
பிரமாண்ட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்  பிரமாண்ட   இயக்குனர் ஷங்கர் இயக்கிய  'முதல்வன்' படத்தில் நடித்து தமிழக அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியவர்  அர்ஜுன். அவர் சென்னாம்பிகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள  'பூமி புத்ரா' என்ற கன்னட படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிக்க இருப்பவர், முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவரின் வாழ்கை வரலாறு பற்றிய படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதல்வர் குமாரசாமியாக நடிக்கிறார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் கன்னட திரையுலகில் இருந்து வருபவர். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் கர்நாடக மக்களிடையே உள்ள செல்வாக்கை அதிகரிக்க அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவாரஷ்யமான  திரைப்படமாக உருவாக்க  உள்ளனர். 'பூமி புத்ரா' படத்தை எஸ்.நாராயணன் என்பவர் படத்தை இயக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. கர்நாடகாவின்  முன்னாள் முதல்வர் குமாரசாமி நடிகையை  2வது திருமணம் செய்தது   உட்பட சர்சைகளுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment