Saturday 13 May 2017

Vjiay - Ajith fans could destroy Tamil Cinema


Vjiay - Ajith fans could destroy Tamil Cinema
Vjiay - Ajith fans could destroy Tamil Cinema
Thala Ajith’s upcoming film Vivegam's teaser has taken the internet by storm. Commenced with countdown in the evening, the teaser was unveiled at midnight on Thursday to a huge response from the fans. The 57-second promo video had amassed more than 5 million views on YouTube in less than 12 hours..
Ahead of the official release, a low resolution version of the teaser was leaked on the internet. Soon, it was circulated on social media and mobile messaging platforms. But, fans of Ajith ran a campaign requesting the viewers to support him by watching the teaser only on the film’s official YouTube channel. 
The loyal fans had to battle the staunch critics of their favourite actor, who began trolling the teaser in support of Ilayathalapathy Vijay. However, despite all the obstacles and criticisms, Vivegam teaser has taken the YouTube by storm trending at No 1 position at the time of writing this article. The video has already garnered more than 7 million views and more than 3 lakh likes compared to over 54,000 dislikes.
What’s more interesting about this piece of news is the fact that the hardcore fans of Ajith ensured that the teaser sets the internet on fire. It is worrying that the fans have gone to the level of releasing pirated version of teaser to bring down the counts of views in youtube. If this trend continues, we can expect that one can share the pirated movies one day, which will be marking the end of cinema. VIjay and Ajith have always sported a friendly relationship to each other. The top actors have to step in to stop the cat fights among their fans.
தமிழ் சினிமாவை அழிக்கப் போகும் விஜய் - அஜித் ரசிகர்கள் 
தல அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சமூக ஊடகங்களில் நடைபெற்ற சில நிகழ்வுகள் கவலை அளிப்பதாக உள்ளன. விவேகம் பட டீஸருக்கான கவுண்டவுன் புதன்கிழமைமாலையே தொடங்கியது. அப்போது அஜித் ரசிகர்களுக்கு, சமூக வலைத்தளங்களில் விவேகம் டீசர் தொடர்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

டீசரை, யூடியூபில் மட்டுமே பார்க்க வேண்டும். முடிந்த வரையில் அனைவருக்கும், வீடியோவின் லிங்க்கை ஷேர் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், யூடியூபில் இருந்து வீடியோவை டவுன்லோட் செய்யக் கூடாது. தனித்தனி ஜிமெயில் கணக்கின் மூலம் டீசரை லைக் செய்ய வேண்டும் போன்றவை தான் அந்த அறிவுரைகள். இவை எல்லாம், விவேகம் டீசருக்கு அதிக வியூஸ், லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 

நள்ளிரவு 12 மணிக்குத் தான் கவுண்டவுன் முடிந்து வீடியோ வெளியாக வேண்டிய நிலையில் 
இரவு 11 மணி வாக்கிலே பலரது வாட்சாப்க்களில் வளம் வர தொடங்கியது விவேகம் படத்தின் டீசர். இது, விஷமிகள் சிலரால் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 
ஆனால், அஜித் ரசிகர்கள் அஃபீஷியல் டீசர் வெளியானது, போட்டிப் போட்டுக் கொண்டு அந்த வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக் கொட்டினார். விஜய் ரசிகர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த வீடியோவை டிஸ்-லைக் செய்தனர். எனினும், சில மணித்துளிகளிலேயே ஒரு மில்லியன் வியூஸை பெற்றது விவேகம் பட டீசர். 
 
உண்மையில் என்ன பிரச்னை என்பது எல்லோராலும் எளிது யூகிக்க முடிந்தாலும் டீசருக்கு போடப்பட்டுள்ள கமெண்டுகளை படித்தாலே உண்மை நிலை முகத்தில் அறையும். விஜய் ரசிகர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட சிலர், "நாங்கள் அந்த டீசரை டிஸ்லைக் செய்யவே வந்தோம். ஆனால், விவேகம் டீசர் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது" என்று கமெண்ட் போட்டு உள்ளனர். இதன் மூலம், இந்த டீசரை டிஸ்லைக் செய்ய விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. 

இதே போன்ற நிலை தான் இளைய தளபதி விஜயின் பைரவா டீசர் மற்றும் டிரைலர் வெளியான போதும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அஃபீஷியல் டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்டு, சமூக வலைத்தளங்களை பரப்பி  யூடியூப் வியூஸ், லைக்குகளை பெறுவதை தடுக்க  முயற்சி மேற்கொண்டது அப்பட்டமாக தெரிகிறது. இன்றைக்கு தங்களின் நாயகனின் போட்டியாளரை கவிழ்ப்பதாக நினைத்துக்க் கொண்டு டீசரை வெளியிடுவார்கள், பின்னாளில் எதிராளியின் படம் ஓடக் கூடாது என்பதற்காக படத்தின் பைரஸி வீடியோக்களை ஷேர் செய்யும் நிலை வந்தால்  தமிழ் சினிமாவே ஆட்டம் காண செய்யும். 

தங்களின் தல, தளபதி என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் ரசிகர்கள், அவர்கள் பகைமையோடு இருக்க வேண்டாம் என்று சொல்வதையும் கேட்டால் நலம். இல்லையேல், இப்போட்டியானது தமிழ் சினிமாவின் அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும்.  நிஜத்தில், அஜித் மற்றும் விஜய் இருவருமே நண்பர்களாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், பொதுவிலும், சமூக வெளியிலும் அவர்களது ரசிகர்களின் எல்லை மீறிய செயல்களுக்கு கடிவாளம் போட வேண்டியது இவ்விரு ஜாம்பவான்களின் கடமை.  

No comments:

Post a Comment