Monday 15 May 2017

Music Comopser Thaman's Bollywood entry

Music Comopser Thaman's Bollywood entry
Music Comopser Thaman's Bollywood entry
Debuted as an actor with Shankar's Boys, S.S Thaman started his career as a composer with 2008 Tamil film "Sindhanai Sei", he established himself as one of the successful composers in South Indian  film industry.
Recently, S.S Thaman said he will be making his Bollywood debut with Rohit Shetty's "Golmaal Again", the fourth part in the popular franchise. "My Bollywood debut with my dear director Rohit Shetty, the man of the masses. It's for 'Golmaal 4'," Thaman tweeted.
He has hits in Tamil, he has worked on films such as "Vallinam",  "Vaalu" and "Sivalinga". In Telugu films such as "Kick", "Kandireega", "Dookudu", "Businessman" and "Sarrainodu" to his credit. With already over 50 films to his credit, he currently working on nearly half a dozen projects.
பாலிவுட்டில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் தமன்
இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக திரைப்படத்தில் அறிமுகம் ஆன தமன், பின்னாளில் 2008-ல் வெளிவந்த சிந்தனை செய் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அப்படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு ஹிட் படங்களுக்கு இசை அமைத்து தென்னிந்தியாவின் முக்கிய இசை அமைப்பாளராய் நிலை நிறுத்திக் கொண்டார். 
சமீபத்தில், தன்னுடைய முதல் பாலிவுட் படம் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர்  மூலம் தெரிவித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆன ரோஹித் ஷெட்டி இயக்கும் 'கோல்மால் அகெய்ன்' படம் மூலமாக இந்தி பட உலகில் அறிமுகமாகிறார் தமன். "என் அன்பு நண்பரும் பல மாஸ் படங்களின் இயக்குனருமான  ரோஹித் ஷெட்டியின் கோல்மால்-4 படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார் தமன். 

இதற்கு முன்னர் இசை அமைப்பாளராக தமிழில் வல்லினம், வாலு மற்றும் சமீபத்தில் வெளிவந்த சிவலிங்கா  உள்ளிட்ட படங்களுக்கும், கிக், கண்டிரீகா, தூக்குடு, பிசினஸ்மேன் போன்ற அதிகமான தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள தமன் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி சாதித்துள்ளார். தற்சமயம் கோல்மால்-4 படத்தோடு, மேலும் 5 படங்களுக்கு இசை அமைக்கிறார் தமன். 

No comments:

Post a Comment