Saturday 13 May 2017

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
விஷாலுக்கு கடும் எதிர்ப்பு | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Vishal Faces Troubles | விஷாலுக்கு கடும் எதிர்ப்பு | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
திருட்டு விசிடி, சிறு முதலீட்டு படங்களுக்கான மான்யம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்யாவிட்டால் மே மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பல்வேறு சினிமாதுறையினர் கலவரயறை அற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால் அறிவித்தார். இதற்காக படங்களை மே 19ஆம் தேதிக்கு மேல் வெளியிடக்கூடாது எனவும் கூறியிருந்தார். இதற்கு பலதரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.  
ஜீவாவின்சங்கிலி புங்கிலி கதவதொறமே 19 ஆம் தேதியும், சமுத்திரக்கனியின்தொண்டன்படமும், அருள்நிதியின்பிருந்தாவனம்படமும் மே 26 ஆம் தேதி வெளியிட உள்ளனர். சம்மர் ஹாலிடேசில் தான் அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் வரும் இந்த நேரத்தில் ஸ்ட்ரைக் என்பது முட்டாள் தனமானது என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள். பாகுபலியால் பல தியேட்டகள் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. பாகுபலி ஒடிக்கொண்டிருக்கும் தியேட்டர்காரர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நன்றாக ஒடிக்கொண்டிருக்கும் படத்தை நிறுத்திவிட்டு தியேட்டரை மூடுவதால் தியேட்டர்கள் நஷ்டத்தை சந்திக்கும் என சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான தலைவர் விஷால், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, கதிரேசன், துனைத்தலைவர்கள் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி.ராமனாதன் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் பல துறைகளை சேர்ந்த தலைவர்களின் ஆதரவு கிடைக்காமல் இருப்பதால் மே 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஸ்ட்ரைக்கும் தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
Twitter:  https://twitter.com/PakkaTv                                                                                      

No comments:

Post a Comment