Monday 15 May 2017

Baahubali game tops in Play store

Baahubali game tops in Play store
Baahubali game tops in Play store
The second installment of S.S. Rajamouli's magnum opus 'Baahubali' has shattered major records at the box office since the day of its release. With each passing day, the movie has amassed as much as Rs 1000 crore worldwide and became the highest grossing movie of any Indian film ever. Many TV series have also started to shoot based on Baahubali's story and characters. 
Baahubali The Game', inspired by epic movie, has crossed over a million downloads since the second part of the film was released. The multi-player strategy game has been developed by Bengaluru-based Moonfrog Labs in association with the movie "Baahubali" production company Arka Media Works and Graphic India.
The game has become the top-most downloaded game and 10th most downloaded app in India. The game is available in English, Hindi, Tamil and Telugu and has a small size of 24MB or depending on the type of phone the player has.
மொபைலில் கலக்கும் பாகுபலி கேம் 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான பாகுபலி இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் வசூலில் முதல் இடத்தை பிடித்து, இந்திய சினிமாவில் இதுவரை எவரும் எட்டாத இமாலய சாதனையான 1000 கோடியை வசூல் செய்து வாகை சூடி இருக்கிறது பாகுபலி 2. தற்போது பாகுபலியை அடிப்படையாக வைத்து சீரியல்கள் வரவுள்ள நிலையில், சைலண்டாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பாகுபலி மொபைல் கேம். 

பாகுபலி படத்தின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மல்டி பிளேயர்ஸ் கேமை இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மூன் ஃபிராக் என்னும் நிறுவனம், பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் இவர்கள் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வெளியான நாள் முதல் நல்ல வரவேப்பை பெற்றிருக்கும் இந்த மொபைல் கேம், ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இந்திய அளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்களில் 10வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. வெறும் 24 எம்பி அளவில் இருக்கும் இந்த கேம், தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.  

No comments:

Post a Comment