Tuesday 16 May 2017

வருவாரு ஆனா வரமாட்டாரு! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


வருவாரு ஆனா வரமாட்டாரு! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
வருவாரு ஆனா வரமாட்டாரு! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Varuvaru ana Varamataru| வருவாரு ஆனா வரமாட்டாரு! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ரஜினிகாந்த் மே 15 ஆம் தேதியிலிருந்து 19 தேதி வரை ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்த்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முதல் நாளான நேற்று ரசிகர்களிடத்தில் அவர் பேசிய பேச்சு ரஜினி எப்படியும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை சில ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் பல ரசிகர்கள் அவரது பேச்சைவரும் ஆனா வராது ரேஞ்சிலேயேவழக்கமான ஒன்றாகவே கருதுகின்றனர். ஒரு சிலர் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களை உற்சாகபடுத்துவதற்காகவே ரஜினிகாந்த் பேசினார் என்கின்றனர்.
ரஜினிகாந்தை உற்று நோக்கிவரும் அரசியல் விமர்சகர்கள் கருதுவது என்னவென்றால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் எண்ணம் வரும்போதெல்லாம் அவருக்கு தடையாக இருந்தவர்கள் கலைஞரும் ,ஜெயலலிதாவும்.
பல பெருந்தலைவர்களின் ஆசியுடன் அரசியல் கற்று ஆட்சி செய்த திமுக, தலைவர் கலைஞர்.கருணாநிதி, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மூத்த தலைவர். ஆண்களே ஆட்சி செய்து வந்த தமிழகத்தில் ஒற்றைப் பெண்மணியாக பெரிய பின்புலம் இல்லாமல் நீண்டகாலம் ஆட்சி செய்து மாபெரும் கட்சியை கட்டுகோப்பாக நடத்தி வந்த மறைந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா. இந்த இருவரின் மேல் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இதனாலேயே அவரிடத்தில் ஒரு அரசியலில் ஈடுபட தயக்கம் இருந்தது.
அரசியலில் ஓய்வு பெற்ற கலைஞரும், ஜெயலலிதாவின் இடத்தை வேறு யாரும் நிரப்பமுடியாத ஒரு சூழலிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டிய தருணம் வந்து விட்டதாகவே அவரதுப் பேச்சு வெளிபட்டுள்ளது. அதாவதுநான் ஒரு வேளை, அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன். அப்படி என்னமிருந்தால் இப்போதே என்னிடமிருந்து விலகிவிடுங்கள்.’ என கூறியுள்ளது, அரசியலுக்கு வர ஆயத்தமாகிவிட்டார் என்றே தெரிகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment