Saturday 13 May 2017

கோபத்தின் உச்சியில் ‘விவேகம்’ எடிட்டர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


கோபத்தின் உச்சியில் ‘விவேகம்’ எடிட்டர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கோபத்தின் உச்சியில் ‘விவேகம்’ எடிட்டர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Vivegam Editor Disappointed | கோபத்தின் உச்சியில்விவேகம்எடிட்டர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் மிகப்பிரம்மண்டமாக உருவாகிவரும் படம் ‘விவேகம்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் அனைத்து ரசிகர்களிடத்திலும் பெரிய அளவில் சென்று சேர்ந்தது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டதுடன் படத்தின் வியாபார பேரம் தற்போது சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.
‘விவேகம்’ படத்தின் டீசர் மே 10 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாவதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே வலை தளங்களில் வெளியானது படக்குழுவினரை அதிரச்செய்தது. இந்நிலையில் டீசரை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனின் உதவியாளர் தான் வெளியிட்டார் என இனைய தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தியை பார்த்து ‘விவேகம்’ படத்தின் எடிட்டர் விரக்தியிலும், கோபத்திலும் அதன் உச்சிக்கே சென்றுவிட்டார். மேலும் தனது வலை தளபக்கத்தில் அந்த இணைய தளத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதில் ‘எனது உதவியாளர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா? அல்லது அவர்களின் பெயராவது தெரியுமா? உங்கள் மேல் என்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன் அந்த செய்தியின் நம்பகதன்மையை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் உங்களது டி.ஆர்.பி க்காக’ கீழ்த்தரமான செய்திகளை வெளியிடாதீர்கள் என பொங்கியுள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment