Tuesday 16 May 2017

Theatre Owners protest against Vishal


Theatre Owners protest against Vishal
Theatre Owners protest against Vishal
விஷாலுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு?
தமிழ்த்திரைப்பட சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமான நடிகர் விஷால் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை செயல் படுத்தாத பட்சத்தில் மே 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யபோவதாகவும், புதுபடங்கள் வெளியிடபோவதில்லை என்றும் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது அதன் விபரம் வருமாறு… 
வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ,திரு.R.பன்னீர்செல்வம்,சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அபிராமி ராமநாதன்கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான திரு. திருப்பூர் சுப்புரமணியம்,திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு ஜோசப் பிரான்ஸிஸ்,திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு பிரதாப்
வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. G.சீனிவாசன்,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.R.செல்வின்ராஜ்,ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள்


சென்னை செங்கல்ப்பட்டு திருவள்ளூர் - அருள்பதி (தலைவர்), ஜெய்குமார் (செயலாளர்),கோயம்புத்தூர் - ராஜமன்னார் (தலைவர்), சிவராமன் (செயலாளர்),மதுரை - R.செல்வின்ராஜ் (தலைவர்), ஷாகுல் அமீத் (செயலாளர்),திருநெல்வேலி - மணிகண்டன் (செயலாளர்),திருச்சி - ரவிச்சந்திரன் (செயலாளர்),வேலூர் - பாலாஜி (தலைவர்),சேலம் - முருகேசன் (தலைவர்),பாண்டிச்சேரி - லோகு (தலைவர்),வட ஆற்காடு - பாலாஜி (தலைவர்), டில்லிபாபு (செயலாளர்) மற்றும் பலர் கலந்துக கொண்டனர்.

No comments:

Post a Comment