Sunday 14 May 2017

Rajni says, "I will not let wrong people in politics"

Rajni says, "I will not let wrong people in politics"
Rajni says, "I will not let wrong people in politics"
Superstar Rajinikanth has finally met a select group of fans Chennai today after a gap of eight years and opened up on if he will join politics in the future. 
Talking about supporting some alliance in the past, he said, “About 21 years ago I was involved in a political accident, during that time for some reasons I had announced my support to a political coalition. And my fans and people of Tamil Nadu ensured a victory for that coalition. Since that day my name is being dragged in every time there is an election. And that’s the reason I keep clarifying that I don’t support any political party every time. 
I'm acting in movies today, but can't predict what will happen tomorrow, even I might enter in politics. But that's in God's hands. I know very well that even my fans are eager join politics. If in case i decide to join politics, I won’t allow wrong people to join me,I’ll keep them away,” the superstar said, again leading to buzz that he may join politics after all.
'நான் அரசியலுக்கு வந்தால், நடப்பதே வேறு' ரஜினி பரபரப்பு பேச்சு 
அரசியலில் நுழைவதை குறித்து தன்னுடைய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட வருடங்கள் கழித்து தன்னுடைய ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பேசிய அவர் " 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் விபத்தால், சில பல காரணங்களால், அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று, அந்தக் கூட்டணியை நீங்கள் அவர்களை வெற்றிபெற வைத்தீர்கள். அது முதல், எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. எனது சில ரசிகர்களும் அரசியல் ஆர்வம் அதிகமாகக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் என் பெயரை தவறாகப் பயன்படுத்த நினைத்தனர். தங்களின் சுய ஆதாயத்துக்காக அணுகும் அரசியல்வாதிகளுக்கு என்னால் ஆதரவு அளிக்க முடியாது.
இப்போது, நடிகனாக என்னுடைய கடமையைச் செய்கிறேன். நாளை என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். ஆனால், என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்.என்னைப் பற்றிய அரசியல் செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக வருவேன். 

காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள். நான் அரசியலுக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ள மாட்டேன். அந்த மாதிரி ஆட்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். ஏன், அவர்களை அரசியலில் நுழையக்கூட விட மாட்டேன், அப்படி எண்ணம் இருப்பவர்கள் இப்போதே ஒதுங்கிடுங்க." என்றார். ரஜினியின் இந்த பேச்சு நிச்சயம் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்பதை ஊர்ஜிதப் படுத்துகிறது. 

No comments:

Post a Comment