Monday, 6 February 2017

Chinamma Replaces Late Tamilnadu Chief Minsiter Jayalalithaa

Chinamma Replaces Late Tamilnadu Chief Minsiter Jayalalithaa
Chinamma Replaces Late Tamilnadu Chief Minsiter Jayalalithaa
அம்மாவின் அரியணையில் சசிகலா
      மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக முப்பது வருடங்களுக்கு மேலாக அறியப்பட்ட சசிகலா, தற்போது அதிமுகவின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன்னர் அரசியல், அரசு துறைகளில் எந்த ஒரு பதவியையும் வகிக்காத சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி சார்ந்த அப்பதவியில் அவர் பொறுப்பேற்கும் போதே பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனை என அடுத்தடுத்து வந்ததால் மக்களின் கவனம் திசை திரும்பி இருந்தது. 
கட்சியும் ஆட்சியும் ஓரிடத்தில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை முதலானவர்கள் வலியுறுத்தி வந்தனர். எனினும் முதல்வர் ஓபிஎஸ் மௌனமாகவே இருந்து வந்தார். இந்த காலகட்டத்தில், வர்தா புயல், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம், ஆந்திர முதல்வரிடம் பேசி கிருஷ்ண நதிநீர் பெற்று தந்தது என ஓரளவு நல்ல பெயரே எடுத்திருந்தார் முதல்வர் பன்னீர் செல்வம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சசிகலாவை எதிர்க்க பாஜக ஓபிஎஸ்-ஐ பயன்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அவ்வப்போது சசிகலாவை சந்தித்து ஆலோசனைகளில் ஈடுபட்டார் ஓபிஎஸ். இருந்தாலும் பட்டும் படாமல் நடந்து கொண்டார் பன்னீர் செல்வம். சில நாட்களுக்கு முன்னர் கூட  முதல்வர் ஓ.பி.எஸ்-க்கும் சசிகலாவுக்கு இடையே உரசல், பனிப்போர் என செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. ஆனால், இப்போது சசிகலாவை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்ததே பன்னீர் செல்வம் தான் என தெரிய வருகிறது. 

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே சசிகலா முதல்வர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை எனினும், ஆட்சியை தக்கவைக்கவும், கட்சியை பிளவுபடாமல் தடுக்கவும் வேறு வழியில்லை என கையைப் பிசைந்து நிற்கின்றனர். ஆனால் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், பொது மக்கள் ஏதோ சூன்யமே வந்தது போல் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.  
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வீட்டை ஆக்கிரமித்த சசிகலா, அவரைப் போன்றே உடை, சிகை அலங்காரம், கார், அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் ஃபிளாஸ்க் (Flask) வரை சகலத்தையும் பின்பற்றி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகி இப்போது முதல்வர் என்ற அரியணையில் என்ற உள்ளார். ஜெயலலிதா இருந்த வரை தமக்கு கட்சி, பதவி போன்றவற்றில் விருப்பமில்லை எனக் கூறிக் கொண்டு இருந்த சசிகலாவின் இந்த அபரித வளர்ச்சி, மாற்றம் தான் பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்துள்ளது. தமிழக முதல்வர் எனும் பெரும்பதவி சசிகலாவுக்கு எளிதில் கிடைத்துவிட்டது. அந்த பதவியை 'அம்மா'வைப் போன்று திறம்பட அலங்கரிப்பாரா 'சின்னம்மா' சசிகலா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு எனும் பெரும் ஆபத்தையும், மக்கள் பிரச்சனைகளையும் எப்படி எதிர்கொள்ளத் போகிறார் என்பதை வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம். 

Sasikala, known as the close friend of late Tamil Nadu Chief Minister Jayalalithaa is all set to take charge as new Chief minister of Tamil Nadu. She will be the third women Chief minister of Tamil Nadu.  Earlier she became the General secretary of All India ADMK after the sudden demise of Jayalalithaa. Referred as 'Chinnamma' by her party members Sasikala still resides in Jayalalithaa's Veda illam in Poes Garden has finally acquiring the chief minister's office following Amma's foot steps. Will the CM aspirant Sasikala be able to deliver a good governance amids of all allegations on her? We have to wait and watch. 

No comments:

Post a Comment