Monday, 6 February 2017

Supreme Court shocks Sasikala

Supreme Court shocks Sasikala
Supreme Court shocks Sasikala
சுப்ரீம் கோர்ட் அதிரடி - அதிர்ச்சியில் சசிகலா
ஞாயிறன்று அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, பிப்ரவரி 7 அல்லது 9 -ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டது. பதவியேற்புக்கான ஏற்பாடுகளும் கனஜோராக நடந்து வந்தன. அதற்கு ஏதுவாக பன்னீர் செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சில மாதங்களாக நிலுவையில் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்புச்செய்தி சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

பன்னீர் செல்வத்தின் ராஜீனாமாவும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், சின்னம்மாவுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் என்ன செய்வது என அதிமுக முக்கிய தலைகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இக்கட்டான தருணத்தை பயன்படுத்தி தமிழக அரசை ஆட்டம் காண செய்து அதன் மூலம் தங்களின் இருப்பை உறுதி செய்ய பாஜக தலைவர் அமித்ஷா-வும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். வரவிருவுக்கும் ஜனாதிபதி தேர்தலை கணக்கில் கொண்டு செயல்படுமாறு மோடியும் அறிவுறுத்தி உள்ளார். இரண்டு தரப்பும் தத்தமது ஆட்களை கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.  

அதிமுகவின் எம்பி, எம்எல்ஏ ஓட்டுக்களை கணக்கில் கொண்டு, சசிகலாவோடு பேரம் நடத்தி அவரை நிரபராதியாக அறிவிக்க நிர்பந்தம் கொடுக்குமா பாஜக அரசு? அல்லது, சசிகலா, ஓபிஎஸ் தவிர்த்து வேறு யாரேனும் தமிழகத்துக்கு முதல்வராக பொறுப்பேர்களா என இன்னும் 10 நாட்களில் தெரிந்துவிடும். மீண்டும் அதி பரபரப்பான கட்டத்தில் வந்து நிற்கிறது தமிழக அரசியல்.
Supreme court has shocked Sasikala and her partymen by announcing that the verdict in Jayalalithaa’s disproportionate assets case will be pronounce in a week. Sasikala is the A2 in this case, which means it may affect her motive of acquiring Chief Minister's office. BJP leaders are in a discussion with some ADMK mediators who are in need of Sasikala's ADMK votes in upcoming Presidential election. Tamil Nadu is on high phase of political dramas currently with twists and turns in every hours.

No comments:

Post a Comment