Friday, 10 February 2017

CM aspirant Sasikala's day dream

CM aspirant Sasikala's day dream
CM aspirant Sasikala's day dream
பகல்கனவாகிறதா சசிகலாவின் முதல்வர் ஆசை 
தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க இயலாது என மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியதாக நேற்றிரவு வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளது சசிகலா தரப்பு. வியாழன் அன்று சென்னை வந்த ஆளுநரிடம் தனக்கு அதிமுகவின் 130க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. எனினும் வெள்ளிக்கிழமை இரவு வரை எந்த ஒரு தகவலும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாக வில்லை. காலம் கடந்து கொண்டே செல்வதால் என்ன  எம்எல்ஏக்களை தங்கள் வசம் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.
நிலைமை கையை மீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஆளுநரின் அறிக்கை என மூன்று பக்க அறிக்கை ஒன்று நேற்றிரவு வெளியானது. அதில், தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க இயலாது, எம்எல்ஏக்கள் நிலை குறித்து தகவல், பன்னீர் செல்வம் மிரட்டப் பட்டு ராஜினாமா செய்ய வைத்து என பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை வேண்டியதாக தகவல் பரவியது. இந்த செய்தி கிடைத்ததுமே அதிர்ச்சியில் உறைந்தாராம் சசிகலா. தன்  முதல்வர் கனவு, பகற்கனவாகிவிடுமோ என அச்சத்தில் மன்னார்குடி உறவுகளோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் டிஸ்சார்ஜ் ஆகி தன மனைவிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். 
 
Sasikala and her supports are in continuous discussion after the report submitted by Tamil Nadu Governor Vidhyasagar Rao. The report says that Sasikala cannot form the government and become Chief Minister as the verdict on DA case is due next week. He has also described the current scenario and dramas in his report to Central Government. After hearing the report Natarajan, husband of Sasikala had discharged from Apollo Hospital to bat for her wife.

No comments:

Post a Comment