Tuesday, 14 February 2017

Jayalalithaa's niece Deepa joins OPS camp

Jayalalithaa's niece Deepa joins OPS camp
 Jayalalithaa's niece Deepa joins OPS camp
ஓபிஎஸ் அணியில் இணைந்தார் ஜெ.யின் அண்ணன் மகள் தீபா 
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. போன செவ்வாயன்று மெரினாவில் உள்ள அம்மாவின் சமாதிக்குச் சென்று அமைதியாக தியானத்தில் ஈடுபட்டார்  பன்னீர் செல்வம். அதற்குப் பின்னரே ஒரு புயல் தமிழக அரசியலை புரட்டி போட்டு இன்று ஓரளவு ஓய்ந்துள்ளது. அதே போன்று  தீர்ப்பு வந்த செய்வாய் அன்றும் அம்மாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ்.
அப்போது அங்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதல்வர் ஓபிஎஸ்யைப் பார்த்து வணக்கம் தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ஓபிஎஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக தெரிவித்துள்ளார். தானும் ஓபிஎஸ்ஸும் அதிமுகவின் இரு கரங்களாய் இருந்து மக்கள் பணி ஆற்றுவோம் என தெரிவித்தார்.

பின்னர் தீபா அங்கிருந்து கிளம்பி, க்ரீன் வேஸ் சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு வருகை புரிந்தார். அங்கு தீபாவைக் கண்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி கரவொலி எழுப்பினர். பின்னர் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர் மகளிர் அணியினர். வீட்டிற்குள் சென்று ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தன் ஆதரவை பதிவு செய்தார். வெளியில் வந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய தீபா, "இன்று  முதல் என் அரசியல் பிரவேசம் தொடங்குகிறது. சசிகலா முதல்வராக முடியாது, வழக்கில் அவர் தண்டனை பெறுவார் என நான் முன்னரே தெரிவித்தேன். ஓபிஎஸ் உடன் இணைந்து பணிபுரிய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறினார். 

Jayalalithaa's niece Deepa joined OPS camp on Tuesday evening. Earlier OPS paid a visit to late Chief Minister Jayalalithaa's memorial where he met Deepa. Later, Deepa went to Panneer Selvam's house. She was welcomed with 'mangala aarathi' by ADMK cadres at OPS house. Deepa extended her support to OPS and told the media that she's starting her political career from then, she will work with OPS to strengthen ADMK. Deepa also recalled her earlier statement that Sasikala won't make it to Chief Minister's office.  

No comments:

Post a Comment