Tuesday, 14 February 2017

Surya acts with Jothika, D16 director's next movie, Singer turned Music director

Surya acts with Jothika, D16 director's next movie, Singer turned Music director
Surya acts with Jothika, D16 director's next movie, Singer turned Music director
  • திருமணத்திற்குப்பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஜோதிகா. ஆனாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பசங்க-2ல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், 36 வயதினிலே படத்தில் நடித்து வந்ததால், பசங்க-2 படத்தில் ஜோதிகா நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பிரம்மா இயக்கிவரும் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. இந்த படத்தை தயாரிப்பவர் வேறு யாரும் அல்ல, நடிகர் சூர்யாவே தான். மேலும், இயக்குனரின் விருப்பத்தை ஏற்று கிளைமாக்சில் வரும் ஒரு கெத்தான கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம் சூர்யா. இதன் மூலம், 'ஜில்லுனு ஒரு காதல்' படத்துக்கு பின் ஒன்றாக நடிக்கிறார்கள் கோலிவுட்டின் ஸ்வீட் ஜோடி.
  • துருவங்கள் பதினாறு படம் மூலம் எல்லாரது கவனத்தையும் பெற்றவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். இயக்குனரின் முதல் படம் என்றே சொல்ல முடியாது வகையில், தேர்ந்த இயக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புது படத்திற்கு 'நரகாசுரன்' என பெயர் சூட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படம், மூன்று மொழி நடிகர்களையும் கொண்டதாய் மல்டி ஸ்டார் படமாய் இருக்கும். தன் முந்தைய படத்தைப் போலவே இந்த படமும் எந்தவித கமர்ஷியல் விஷயங்களை கொண்டிருக்காது என்று உறுதியாய் சொல்லி இருக்கிறார் நரேன்.
  • தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்றே தெரியும் போல ஆனால் தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் "எனை நோக்கிப் பாயும் தோட்டா" படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்னும் இருக்கிறது. பக்கா டிவியின் இன்வெஸ்டிகேஷனில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற எக்ஸ்க்ளுசிவ் தகவல் கிடைத்துள்ளது. பாடகர் 'சித் ஸ்ரீராம்' தான் அந்த இசையமைப்பாளர். ஏற்கெனவே அமெரிக்காவில், பல ஆல்பங்களையும், மியூசிக் வீடியோக்களையும் உருவாக்கியவர் தான் சித். இவரின் ஆல்பங்களை கேட்ட பின்னரே இவருக்கு வாய்ப்பளித்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். 'தள்ளிப்போகாதே' பாடல் பதிவின்போதே தன் ஆல்பங்களை கௌதமிடம் கொடுத்திருந்தார் சித். அதை எல்லாம் கேட்டு இம்ப்ரஸ் ஆன பின்னரே 'எனை நோக்கி பாயும் தோட்டா"வின் இசையமைப்பாளராய் சித் ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கௌதம். படத்தின் ப்ரோமோஷனுக்கு உதவுமே என இன்னமும் இசையமைப்பாளர் யார் என்று மக்களை சிந்திக்க வைத்துக் கொண்டுள்ளனர் படக்குழுவினர். 
  • Jothika is currently acting in director Brahmma's 'Magalir Mattum'. Actor Surya is producing the film under his production house 2D entertainment. Apart from producing actor Surya also making an guest appearance in the climax of the movie which is said to be an important role. This will be the first time Surya and Jothika are acting together after their super hit movie 'Jillinu oru Kaadhal'.
  • Director Karthick Naren has impressed K-town with his debut movie 'Dhuruvangal 16". Now he's working on his next movie titled "Naragaasuran". This is a multi-starrer trilingual movie which will be featuring Tamil, Telugu & Malayalam's lead actors.
  • Your favourite Pakka TV has broke the suspense and gathered exclusive details of Dhanush and Gautham Vasudev Menon's 'Enai Nokki Paayum Thotta'. We came to now that mysterious music composer of the movie is singer Sid Sreeram. Sid has already composed various albums and featured in many music videos. Gautam was impressed with his album and gave him a chance as music composer when they first met during 'Thallippogadhe' song recording.

No comments:

Post a Comment