Politics bytes: Edappadi Palanichami becomes CM, Gautami's support to OPS, Sasi's new control centres
Politics bytes: Edappadi Palanichami becomes CM, Gautami's support to OPS, Sasi's new control centres
பரபர பாலிடிக்ஸ் முதல்வராகும் எடப்பாடி, ஜெயிலில் அதிமுகவை கவனிக்கப் போகும் சசிகலா, கௌதமின் அரசியல்
- நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக சசிகலாவுக்கு பதிலாக புதிய சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார் சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தன் மூலமாக முதன் முறையாக முதல்வர் ஆகும் யோகம் பெற்றிருக்கிறார் எடப்பாடி. தான் தேர்வு செய்யப்பட்ட பின்னர், ஆளுனர் மாளிகை சென்று தன் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தைக் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இப்போது வரை எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளார் ஆளுநர்.
- கூவத்தூரில் இருந்து நேற்றிரவு போயஸ் இல்லம் சென்ற சசிகலா இங்கு குழுமியிருந்த தொண்டர்களிடம் பேசினார். தமக்கு வந்துள்ள துயரம் தற்காலிகமானது, யாரும் கலங்க வேண்டாம். தம்மை மட்டுமே சிறையில் அடைக்க முடியும், தன் எண்ணங்கள் அனைத்தும் அதிமுக கட்சியை சுற்றி இருக்கும். சிறையில் இருந்தே கட்சியை நான் கண்காணிப்பேன். அதற்கு தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என கூறினார். இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கேட்டபோது, சிறையில் ஒருவர் இருந்துகொண்டே கட்சிப்பணிகளில் தொடர எந்த தடையும் இல்லை என கூறியுள்ளனர்.
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட நடிகை கௌதமி தற்போது ஓபிஎஸ் ஆதரவு நிலையில் உள்ளார். இன்று காலை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் பன்னீர் செல்வம் இல்லத்திற்கு வந்த கௌதமி, தற்போதைய சூழலில் தர்மம் வென்றுள்ளது, தம்முடைய ஆதரவு ஒபிஸ்க்கு தான். அம்மா ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
- கடந்த 2011ம் ஆண்டு அதிமுகவில் இருந்து சசிகலாவின் உறவினர்களான டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டனர். மீண்டும் சசிகலா போயஸ் கார்டனில் இணைந்தாலும் மற்ற உறவினர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. நாளை சசிகலா சிறையில் அடைபட உள்ள இந்நிலையில் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். டி.டி.வி தினகரன் துணை பொது செயலாளர் ஆகி உள்ளார். இவர்கள் மூலமாக கட்சியை சிறையில் இருந்து இயக்குவார் சசிகலா என கூறப்படுகிறது.
- After the verdict in DA case, ADMK has elected their new leader to become the Chief Minister. Edappadi Palanichaami has been chosen as the leader and he has met Governor and submitted his selection along with MLA's supporting letters.
- Sasikala will surrender in Bangalore court on Thursday. She would be spending next years in Bangalore jail. However yesterday she told her cadres that she will continue to guide the part from jail. None can stop my thinking about party in jail. She also sought the unity ADMK cadres.
- Actress Gautami is the new addition in OPS camp. Today Gautami came to OPS's Greenways house and lend her support for OPS. She reiterated that the mystery behind the death of Amma Jayalalithaa should be probed immediately.
- Sasikala's close relatives TTV Dinakaran and Vengadesh have been rejoined in ADMK as Sasikala is surrendering in Banglore court tomorrow. TTV Dinakaran is appointed as Deputy General Secretary. This clears the skies that Sasikala will be holding the control of ADMK even after going to jail.
No comments:
Post a Comment