Thursday, 27 April 2017

Actor Vinu Chakravarthy passed away

Actor Vinu Chakravarthy passed away
Actor Vinu Chakravarthy passed away
Veteran Tamil actor and writer Vinu Chakravarthy, who had starred in over 1,000 films, breathed his last here on Thursday, 27 April 2017. He was 72. Born in 1945, he began his career as a script writer and worked under Kannada director Puttana Kanagal. Chakravarthy had acted in 1002 films, mostly in Tamil.
He had acted in over 900 Tamil films. Some of his best movies include Gopurangal Saivathillaia, Manithan, Guru Sishyan, Mappillai and Amarkalama among others. He was instrumental in launching the career of late actress Vijayalakshmi aka Silk Smitha. He had also acted in a few Malayalam and Kannada films.
His last on screen appearance was in 2014 Tamil film Vaaya Moodi Pesavum. Super star Rajnikanth, Kamalahasan and many other stars have mourned the demise of Vinu Chakravarthy. Actor turned Politician Vijayakanth have said that it is great loss for film industry in his condolence statement. 
நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார்
பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி நேற்று 27 ஏப்ரல் 2017, வியாழக்கிழமை இரவு காலமானார். ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ள வினு சக்ரவர்த்திக்கு சமீபகாலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவருக்கு வயது 72. கன்னட இயக்குனர் புட்டன கனகலிடம்  எழுத்தாளராக சினிமாவில் நுழைந்த வினு சக்ரவர்த்தி, பின்னர் கதாசிரியராக, நடிகராக மிளிரத் தொடங்கினார்.

தமிழில் மட்டுமே 900 படங்களுக்கு மேலான படங்களில் நடித்துள்ள வினு சக்ரவர்த்திக்கு, கோபுரங்கள் சாய்வதில்லை, மனிதன், குறு சிஷ்யன், மாப்பிள்ளை, அமர்க்களம் போன்ற படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெருமை கொண்டுள்ளார்.  நடிகை சில்க் ஸ்மைதாவை தன்னுடைய வண்டிச் சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகப் படுத்திய பெருமையும் வினு சக்ரவர்த்தி அவர்களுக்கு உண்டு.  

தமிழில் கடைசியாக, 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார். இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நடிகர்கள் கமல் உள்ளிட்ட மற்ற திரை பிரபலங்களும் அன்னாரின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். வினு சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர், நடிகரும், தேமுதிக  தலைவருமான விஜயகாந்த், 'வினு சக்ரவர்த்தியின் மறைவு சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு' என்று புகழாரம் சூட்டி உள்ளார்.  

No comments:

Post a Comment