Tuesday 25 April 2017

Baahubali 2's tickets sold out in minutes

Baahubali 2's tickets sold out in minutes

Baahubali 2's tickets sold out in minutes
Baahubali 2 is unarguably the biggest film event this year. With just 2 days left for the release of the film, Baahubali 2 has received fantastic response in advance booking.The film, which completed the censor formalities last week, has been passed with a U/A certificate. Going by the booking status in online ticket booking websites, most of the tickets have been sold for the first weekend across South India.
In Tamil Nadu, SPI cinemas, one of the largest multiplexes in Chennai, had opened the pre-booking option on Saturday (April 22). It must be noted that the tickets were sold within few minutes for the first weekend. It is also said that the theatres are filling up fast in Andhra and Kerala. After the Karnataka row over Sathyaraj's controversial speech, the advance booking is made available and almost all seats are filled for the weekend.
Baahubali: The Conclusion is released in over 6,500 screens across India in languages like Tamil, Telugu, Hindi and Malayalam. Considering the unprecedented craze for the film, Baahubali 2 is very likely to become the highest grossing Indian film.
சில நிமிடங்களில் விற்று தீர்ந்த பாகுபலி 2 டிக்கெட்டுகள் 
இந்தியாவின் மிகப்பெரும் படமாய் தயாராகி உள்ள பாகுபலி-2 இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில், தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், ஆன்லைன் புக்கிங்கில் முன்கூட்டியே பெரும் சாதனையைப் படைத்துள்ளது. பிரபல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளங்களை காணும்போது, தென்னிந்தியா முழுவதுமே, மே மாதம் முதல் வாரம் வரை படத்தின் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 

சென்னையில் பெரிய திரை அரங்கமான எஸ்பிஐ மல்டி பிளக்சில் முதல் வாரத்தின் காட்சிகள் அனைத்தும் புக் ஆகி உள்ளது. கடந்த 22ஆம் தேதி அன்று முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை காலியாகி உள்ளன. ஆந்திரவிலும் ரசிகர்கள் மொத்தமாக தியேட்டர்களை ஆக்கிரமித்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதே போன்று தான் கேரளாவிலும், தியேட்டர்களில் டிக்கெட்டுகள் வேகமாக ரிசர்வ் ஆகின்றன. சத்யராஜின் வருத்தத்திற்கு பிறகு கர்நாடகாவில், ஆன்லைன் புக்கிங் ஆரம்பமாகி திங்கள்கிழமை வரைக்கும் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளன. 

இயக்குனர் ராஜமெலி இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர்கள் பிரபாஸ், ராணா,சத்யராஜ்  நடிககைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 6500க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள பாகுபலி 2 , எளிதில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment