Wednesday, 26 April 2017

Children's Celebration Movie

Children's Celebration Movie

குழந்தைகள் கொண்டாடும்   “ வானரப்படை “ எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்
 
ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு  “ வானரப்படை “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார்.       மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
அவந்திகா  என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன்  அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.ஜெயபிரகாஷ்
 
படம் பற்றி இயக்குனர் M.ஜெயபிரகாஷ் கூறியதாவது..
 
பெற்றோருக்கும்  அவர்கள்  குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது...அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக உருவாக உள்ளது “வானரப்படை “ என்கிறார் இயக்குனர் எம்.ஜெயபிரகாஷ். இவர் கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராகப் பணி புரிந்ததுடன் நேர் எதிர் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர். நாயகியாக அறிமுகமாகிறார் அவந்திகா. இவர் இந்தியாவில் பிரபல நடிகைகள் நடித்த விளம்பரப் படங்களில் உடன் நடித்து உள்ளார்.ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது...ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment