Monday, 24 April 2017

சரவணா ஸ்டார் உரிமையாளரால் சினிமா கெட்டுவிட்டதா?

சரவணா ஸ்டார் உரிமையாளரால் சினிமா கெட்டுவிட்டதா?


சரவணா ஸ்டார் உரிமையாளரால் சினிமா கெட்டுவிட்டதா?
சமீப காலமாக சமூவலைத்தளங்களில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் அதிகமாக பேசபடுபவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தான் காரணம் 'நயன்தாராவுடன் நடிப்பேன்' என அவர் கூறியதாக வந்த தகவல்.  
 
தனது தங்கையின் மகன் ஐக் இயக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனை குறிப்பிட்டு பேசினார்.
 
"என் மகன் சினிமா என்றாலே 8 அடி தள்ளி ஓடுகிறார், சினிமாவில் நன்றி கெட்டவர்கள் அதிகம் என தெரிந்துகொண்டாரோ என்னவோ சினிமா ஆசையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஒரு மனிதனாக எனக்கு அடுத்து சினிமா வாரிசு இல்லையே என எனக்கு வருத்தம் உள்ளது, இப்போது அரசியல் முதல் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வாரிசு உள்ளது சரவணனா ஸ்டோர்ஸ் உரிமையாளர் உட்பட, அவர் சினிமாவுக்கு வரப்போகிறார் என விளம்பரத்தில் தோன்றும்போதே நான் யூகித்தேன். இப்போது யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம் எனும் நிலைதான் உள்ளது. சினிமா மிகவும் கெட்டுவிட்டது" என கூறினார் ராதாரவி.

No comments:

Post a Comment