Tuesday, 25 April 2017

Cinematographer and Director NK Viswanathan passed away

Cinematographer and Director NK Viswanathan passed away
Cinematographer and Director NK Viswanathan passed away 
ஒளிப்பதிவாளர்,இயக்குனர் NK.விஸ்வநாதன் மரணம்
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் கே விஸ்வநாதன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.  கமல் நடித்த சட்டம் என் கையில் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தொடர்ந்து கடல்   மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
என்கே விஸ்வநாதன், மறைந்த இயக்குநர் இராம நாராயணனுக்கு  நெருங்கிய நண்பராகவும்   ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவும்  திகழ்ந்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், பாண்டி நாட்டுத் தங்கம், படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் அதை தொடர்ந்து  எங்க ஊரு காவக்காரன், இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, புதுப்பட்டி பொன்னுத்தாயி, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள அவர் சென்னை  வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை   என்.கே.விஸ்வநாதன்னுக்கு ஏற்பட்ட  மாரடைப்பால்  காலமானார்.  மறைந்த அவரின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இன்று மலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment