Tuesday, 25 April 2017

Sneha Follow's Vishal

Sneha Follow's Vishal

விஷாலை தொடர்ந்து செல்லும்  சினேகா!
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவினார் அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகை சினேகா மற்றும்  நடிகர்பிரசன்னாவுக்கு  நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார். 

அதன்படி சினேகா  மற்றும் பிரசன்னா  நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவும் வகையில் அண்மையில்  நடந்த நிகழ்வில் 2-லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா , சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்ச்செயல் பாராட்டுக்குரிய  ஒன்றாகும். இந்நிகழ்வு விஷால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட " Friends Of Farmers " எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.

No comments:

Post a Comment