Thursday, 27 April 2017

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த விஷாலின் அரசியல் ஆசை?

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த விஷாலின் அரசியல் ஆசை?

Actor Vishal to Enter Politics? | வெளிச்சத்துக்கு வந்த  விஷாலின் அரசியல் ஆசை?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் 'நாளை நமதே'  .இந்த தலைப்பைக்கொண்டு  சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனங்கள்  இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.
இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதிஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
விஷாலின் சமீபத்திய நடவடிக்கைகள் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டுவதாக பேசப்பட்டு வரும் நிலையில் எம்ஜிஆர் படத்தின் தலைப்பைக்கொண்டு உருவாக்கப்படவுள்ள படத்தின் மூலம் மேலும் அவரின் அரசியல் ஆசை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:
Twitter:  https://twitter.com/PakkaTv                                                     

No comments:

Post a Comment